வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அத்தனையும் டூப்பு.. GOAT படத்தில் விஜய் நடிக்கலையாம்.. வெங்கட்பிரபுவின் பித்தலாட்டம்

Vijay In Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. சமீபத்தில் விஜய் பாடிய விசில் போடு பாடல் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றதால் படம் எந்த மாதிரி இருக்கும் என்று ஒரு சந்தேகத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 10 வருடமா போராடும் வெங்கட் பிரபுவின் 5 ஹிட் படங்கள்

Chennai 600028 (2007)
Saroja (2008)
Goa (2010)
Mankatha (2011)
Biriyani (2013)

ஏனென்றால் விஜய் இந்த படம் முடிந்த நிலையில் அடுத்த இன்னொரு படம் மட்டும் நடித்துவிட்டு அரசியலுக்கு போகப் போகிறார். இந்த சூழலில் கடைசியாக நடிக்கும் படங்கள் நல்லா இல்லை என்றால் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்கு இடையில் கோட் படத்தில் நடந்த சில விஷயங்கள் என்னவென்று வெளிவந்திருக்கிறது.

கோட் படத்தில் ஏமாற்றிய விஜய் எப்படி தெரியுமா?

அதாவது விஜய் படங்களை பொறுத்தவரை அவருடைய நடிப்பும் சண்டையும் ரொம்பவே மாசாக இருக்கும் என்றுதான் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருவார்கள். ஆனால் கோட் படத்தில் இருக்கக்கூடிய விசில் போடு பாடலைத் தவிர மற்ற பாடல்களை டூப் போட்டு தான் எடுத்திருக்கிறார்கள். முக்கியமாக இதில் மாஸ்க் போட்டு டான்ஸ் ஆடுகிற மாதிரி ஒரு பாடல் இருக்கிறது.

அந்தப் பாடல் முழுவதும் டூப் போட்டு ஆர்டிஸ்ட்களை ஆட வைத்து எடுத்து இருக்கிறார்கள். இன்னும் சொல்ல போனால் சண்டை காட்சிகளையும் டூப் ஆர்டிஸ்ட்களை வைத்து எடுத்து விடுங்கள் என்று விஜய்யை சொல்லி இருக்கிறார். வழக்கத்துக்கு மாறாக ஏதோ படத்தை முடிக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் இருந்ததே தவிர நடிப்பில் முழு ஆர்வமும் இல்லாமல் தான் விஜய் இருந்திருக்கிறார்.

தற்போது அவருடைய முழு கவனமும் அரசியலில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதுதான் இருக்கிறது. அதனால் நடிப்பில் ஏதோ ஏணதானோ என்று கடமைக்கு நடித்தது போல் நன்றாகவே தெரிகிறது என்று படக்குழு தரப்பிலிருந்து தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது சொன்னபடி எப்படியாவது படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக டூப் ஆர்டிஸ்ட்டுகளை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.

விஜய்யின் மன நிலைமையை புரிந்து கொண்டு வெங்கட் பிரபுவும் பல சித்து வேலைகளை செய்திருக்கிறார். அதாவது விஜய் அடுத்த படத்துடன் அரசியலுக்கு போய்விடுவார். ஆனால் நாம் இயக்குனராக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக கோட் படத்தில் முக்கால்வாசி காட்சிகள் அனைத்தையும் டூப் ஆர்டிஸ்ட்களை போட்டு வெங்கட் பிரபு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

அப்படி என்றால் கோட் படம் பார்ப்பதற்கு விஜய் படம் மாதிரி இருக்குமா? அல்லது ஏமாற்றத்தை கொடுக்குமா என்பது ஒரு கேள்விக்குறியை எழுப்பி வருகிறது. ஏற்கனவே வெளிவந்த விசில் போடு பாடல் விஜய் பாடல் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தார்கள்.

இந்நிலையில் மொத்த படமும் சொதப்பி விட்டால் இதுவரை எடுத்த பெரும் புகழையும் கெடுக்கும் அளவிற்கு அமைந்துவிடும். அரசியலில் நுழையும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு அவப்பெயர் உங்களுக்கு தேவையா தளபதி?

அரசியலின் ஆழம் பார்க்க எந்த எல்லைக்கும் செல்லும் தளபதி

Trending News