திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யாருமே எதிர்பாராத கூட்டணியில் தளபதியின் வாரிசு.. லோகேஷ் அளவுக்கு பில்டப் கொடுக்குறாங்க பழிக்குமா!

Thalapathy Varisu: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் பத்தாது என்று, அவருடைய வாரிசும் தற்போது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஜா என்ற மகளும் இருக்கிறார்கள்.

சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த தளபதி விஜய் அது தொடர்பான படிப்பை படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதை அடுத்து ஜேசன் சஞ்சய் அவருடைய தந்தை போல் கதாநாயகனாக நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தாத்தா போல் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்பதில்தான் அதிக ஆர்வம் இருக்கிறது.

Also Read: தளபதி 68ல் விஜய் நடிக்கப் போகும் கேரக்டர் இதுதான்.. நான்கு வருடத்திற்கு பின் மீண்டும் தயாராகும் சம்பவம்

இதனால் அவர் படித்துக் கொண்டிருக்கும் போதே எடுத்த குறும்படங்களும் இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டது. இதை எடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்குவதாக தகவல்களும் வெளியானது. இந்த நிலையில் தமிழ் சினிமாவிற்கு பிரம்மாண்ட படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கும் புதிய படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் ஜேசன் சஞ்சய் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தினர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே சஞ்சய் முதல் முதலாக அவருடைய தந்தை விஜய்யை வைத்து படம் இயக்க விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

Also Read: லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

அவர் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து தான் படம் எடுக்க வேண்டும் என்று கூறினார். தற்போது லைக்கா தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த படத்தில் இன்னும் யார் யார் நடிக்கப் போகிறார்கள் படத்தின் டைட்டில் என்ன என்பது போன்ற முழு விவரமும் இனி அடுத்தடுத்த நாட்களில் வெளியாகப் போகிறது.

தற்போது இருக்கும் இயக்குனர்களில் லோகேஷ் கனகராஜுக்கு தான் அதிகம் மவுசு. அவர் அளவுக்கு இப்போது ஜேசன் சஞ்சய்யையும் பில்டப் காட்டுகின்றனர். இது எந்த அளவிற்கு பழிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லைக்கா தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் புதிய படம்

vijay-son-cinemapettai
vijay-son-cinemapettai

Also Read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

Trending News