தளபதி விஜய்யின் பதிவு இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருந்தார். இதற்காக அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்குகளும் தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கட்சி தொடங்கிய பின் விஜய் முதல் முறையாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பரிசளிப்பு விழா தான். அதாவது கடந்த முறை அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே 10ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிகம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொகுதி வாரியாக பிரிக்கப்பட்ட முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பல மணி நேரத்திற்கும் மேலாக விஜய் ஒரே இடத்தில் நின்று, சிரித்த முகத்துடன் பரிசு வழங்கி இருந்தார். இந்த விஷயம் பலராலும் பாராட்டப்பட்டு இருந்தது.
மாணவர்களுக்கு வாழ்த்து கூறிய விஜய்

அதுவும் கடந்த முறை பன்னிரண்டாம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கி இருந்தார். அதேபோல் இந்த முறையும் ஜூன் மாதம் 10 ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை தொகுதி வாரியாக பிரித்து பரிசு வழங்கப்பட உள்ளது.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவும் தளபதி போட்டிருக்கிறார். அதாவது தமிழக மற்றும் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
மேலும் மற்றவர்கள் அதாவது தேர்வில் தோல்வியுற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவரும் இனி தத்தம் உயர் கல்வி இலக்குகளுடன் வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து, வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகள் ஆக வளர இதயபூர்வ வாழ்த்துக்கள்.
விரைவில் நாம் சந்திப்போம் என்று விஜய் அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால் மிக விரைவில் இதற்கான பிரம்மாண்ட கூட்டம் நடக்க உள்ளது. அதற்கான வேலையில் இப்போது தமிழக வெற்றிக் கழக கட்சி தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.