Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

GOAT ரிலீஸில் தளபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானான் ஆண்டி

GOAT ரிலீஸில் தளபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானான் ஆண்டி

Thalapathy Vijay: ‘தம்பி இது ரத்த பூமி, இங்க பைப்பை தொறந்தா ரத்தம் தான் வரும்’ இது கைப்புள்ள காமெடியா சொன்னது. ஆனா இப்போ அது தளபதிக்கு சரியா போச்சு. தலைவன் எங்க போறாரு, என்ன பன்றாருனு பாக்குறதுக்கு […]

Thalapathy Vijay: ‘தம்பி இது ரத்த பூமி, இங்க பைப்பை தொறந்தா ரத்தம் தான் வரும்’ இது கைப்புள்ள காமெடியா சொன்னது. ஆனா இப்போ அது தளபதிக்கு சரியா போச்சு. தலைவன் எங்க போறாரு, என்ன பன்றாருனு பாக்குறதுக்கு ஒரு கூட்டமே சுத்திகிட்டு இருக்கு.

விஜய் அரசியல் பேச கூடாது, பேச பயப்படணும்னு அவருடைய படங்களுக்கு நிறைய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்போ அவர் அரசியல் கட்சி தொடங்கி, தேர்தல் களத்தில் களம் காண போவதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.

ஆளுக்கு ஒரு மைக் புடிச்சு, விஜய் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனால் உண்மையில் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் முக்கிய புள்ளிகளை ஆட்டம் காண வைத்து கொண்டு இருக்கிறது.

விஜய் அரசியலை நோக்கி சரியான பாதையில் பயணித்து கொண்டோருக்கிறார். இதில் அவர் கடக்க வேண்டிய மிகப்பெரிய இரண்டு விஷயம் அவர் நடித்து ரிலீஸ் செய்ய போகும் ரெண்டு படங்கள் தான். இதில் முதலில் தொக்காக சிக்கியது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் GOAT படம் தான்.

விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அடி மடியில் கனம் தான். அரசியல் சூழ்ச்சியால் படத்திற்கு ஏதாவது பாதிப்பு வந்தாலும், இவரின் தலையை தான் உருட்டுவார்கள். தலைவனுக்கு ஏற்கனவே மாநாடு படத்திற்கு பிறகு அடிமேல் அடிதான்.

ஏடாகூடமாக ஏதாவது நடந்தாலும் வழக்கம் போல சொதப்பி விட்டார் என அவர் மீது பழி வந்துவிடும். விஜய் அரசியல் பேசும் படங்களையே வச்சு செய்து விடுவார்கள். அரசியல் தலைவரான பிறகு ரிலீஸ் ஆகும் படத்தை என்னவெல்லாம் செய்ய காத்து கிடக்கிறார்களோ தெரியவில்லை.

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானான் ஆண்டி

ரெண்டு படங்களை முடித்த கையோடு கூட விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாம். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல் இப்ப கதை ஆகிவிட்டது.

எது எப்படியோ GOAT படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் காத்து இருக்கிறது. விஜய் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் தளபதியின் குரல் என செய்தியை படிக்கும் போதே புல்லரித்து போகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.