வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

40 வருடங்களாக விஜய்யின் இமேஜை கெடுத்து அசிங்கப்படுத்திய சம்பவங்கள்.. அரசியல் முடிவுக்கு காரணம் இதுதான்

Thalapathy Vijay Birthday: தளபதி விஜய் இன்று பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் வரை அவர் சந்தித்த பிரச்சனைகள் ரொம்பவே அதிகம். விஜய்யை பொறுத்த வரைக்கும் ரொம்பவும் கூச்ச சுபாவம் உடையவராகவும், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த நடிகன் தான். அவர் சந்தித்த பிரச்சனைகளும், அவமானங்களும் தான் இன்று அவரின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருந்து இருக்கிறது.

இன்று நான், நீ என்று போட்டி போட்டு கொண்டு விஜய் கால் ஷீட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களே, கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய்க்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். இதற்கு பின்னால் ஒரு பெரிய அரசியல் சூழ்ச்சியே இருந்தது. விஜய் மற்றும் அசின் நடித்த காவலன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என சில திரையரங்கு உரிமையாளர்களே குரல் கொடுத்தனர். விஜய் ஒரு மார்க்கெட் இழந்த ஹீரோ என சித்தரிக்கப்பட்டார்.

Also Read:40 வருட திரையுலக வெற்றிக்கு தளபதி மெயின்டைன் செய்யும் 5 சீக்ரெட்.. இரண்டு தலைமுறையாக கொண்டாடப்படும் ஹீரோ

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்குள் விஜய் ரொம்பவே நொந்து போய் விட்டார். பல அரசியல் காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. விஜய் தனிபட்ட முறையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கொடநாடு சென்று சந்தித்து பேசினார். அதன் பிறகு தான் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இன்றுவரை விஜய் மீது இருக்கும் மிகப்பெரிய விமர்சனம் இது.

அதே போன்று மாஸ்டர் பட சூட்டிங்கின் போது விஜய்யின் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதற்காக நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் ஒரு குற்றவாளி போல் சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்போது ரொம்ப பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது விஜய்க்கு கடைசி வரிசை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரை ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளாமல் இருந்தனர். இந்த வீடியோ இப்பவும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான ஒன்று.

Also Read:விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

இதுபோன்ற பிரச்சனைகள் மட்டுமில்லாமல், விஜய் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்குள் ஒரு மிகப்பெரிய போராட்டமே நடந்து விடும். துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்க்கார் என ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு காரணம் பிரச்சனைகளாக வந்து நின்றது. இவர் சார்ந்த மதத்தை வைத்து கூட சில அரசியல் தலைவர்கள் இவரை விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

கல்விக்காக மாணவர்களை விஜய் ஊக்கப்படுத்த நினைத்தால் கூட, அது அவருக்கு விமர்சனங்களாக தான் மாறும். விஜய் எது செய்தாலும் குறை ஒரு கூட்டமே ஒன்று. இன்று பீனிக்ஸ் பறவை போல் அவர் எழுந்து நின்று கேள்வி கேட்பதற்கும், அவருடைய அரசியல் நகர்விற்கும் காரணமே அவர் சந்தித்த பிரச்சனைகள் தான். என்ன தான் சில காரணங்களால் விஜய் பல தடைகளை சந்தித்தாலும் அவருடைய ரசிகர்கள் எப்போதுமே அவருக்கு ஒரு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கிறார்கள்.

Also Read:ஒரு மாசமாக திட்டம் போட்ட தளபதி.. துளிகூட கை கொடுக்காத SAC குடும்பம்

Trending News