செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

லியோ மொத்தப் படக் குழுவும் பேக்கப்.. ஒன் மேன் ஆர்மியாக மாஸ் காட்டும் விஜய்

தளபதி விஜய் வாரிசு திரைப்பட வெற்றிக்கு பிறகு, தன்னுடைய வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் இந்த படத்திற்கான சூட்டிங் வேலைகள் சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்காக லியோ திரைப்படத்தின் மொத்த படக்குழுவும் ஜம்மு காஷ்மீர் சென்றனர். ஜம்மு காஷ்மீரை பொறுத்த வரைக்கும் நல்ல வெயில் காலத்திலேயே பயங்கரமாக அங்கு குளிரும். படக்குழு இப்போது சென்றிருப்பதோ பயங்கரமான குளிர் காலத்தில். சென்னையிலேயே குளிர் வாட்டி வதைக்கும் நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் மொத்த வெப்பநிலையும் மைனஸில் தான் இருக்கிறது.

Also Read: அஜித்தால் மட்டுமே இழுத்தடிக்கும் AK-62.. லியோவுக்கு போட்டினா சும்மா விட்ருவோமா!

ஜம்மு காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நடிகை த்ரிஷா உடனே சென்னை திரும்பினார். இதனால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று கூட வதந்திகள் பரப்பப்பட்டன. உண்மையில் த்ரிஷா அங்கு குளிர் தாங்க முடியாமல் தான் சென்னை வந்திருக்கிறார். தற்போது த்ரிஷா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் த்ரிஷா தன்னுடைய போர்ஷனை முடித்து கொடுத்துவிட்டு டெல்லி சென்று தங்கி விடுகிறாராம். இதற்கிடையில் அங்கு காலையில் 11 மணிக்கு மேல் தான் வெளிச்சம் வருகிறதாம். 3 மணிக்கெல்லாம் இருட்டி விடுகிறதாம். இதனால் லியோ படக்குழு ரொம்பவே திணறி வருகிறதாம். யாராலும் அதிகாலையில் படப்பிடிப்புக்கு செல்ல கூட முடியவில்லையாம்.

Also Read: விஜய் அஜித்திற்கு இணையாக போட்டி போடும் ஹீரோ.. 50 கோடி சம்பளம் கேட்கும் வில்லன் ஹீரோ

கடும் குளிர் என்பதால் அங்கே வேலை செய்யும் டெக்னீசியன்கள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் சளி தொற்று ஏற்பட்டு வருகின்றதாம். இதனால் லோகேஷ் கனகராஜ் பயங்கர அப்செட்டில் இருந்தாலும், படக்குழுவின் நலன் கருதி, லோகேஷ் மற்றும் லியோ படத்தின் மொத்த பட குழுவும் பேக்கப் பண்ணும் ஐடியாவில் இருக்கிறார்களாம்.

இப்படி ஒரு சூழல் இருக்க தளபதி விஜய் மட்டும், எவ்வளவு குளிரிலும் ஜம்முனு கிளம்பி சூட்டிங் வந்து விடுகிறாராம். மொத்த படக்குழுவும் திணறிக் கொண்டு இருந்தாலும், நடிகர் விஜய்யின் சின்சியாரிட்டி பார்த்து எல்லோருமே அசந்து தான் போயிருக்கிறார்கள். அவருடைய இப்படிப்பட்ட கடின உழைப்பு தான் எப்பொழுதும் அவர் நம்பர் ஒன்னில் இருப்பதற்கு காரணம்.

Also Read: ஜவான் படத்தின் கேமியோ ரோலில் விஜய் இல்லை.. அண்ணனை தூக்கிட்டு அர்ஜுனுக்கு போட்ட ஸ்கெட்ச்

Trending News