செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

20 வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் விஜய்யின் படம்.. வசீகராவை மிஞ்சிய காமெடியின் வெறித்தனம்

Thalathy Vijay’s film is re-released after 20 years: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் இளைய தளபதி இன்று வசூலை எதிர் நோக்கியே வணிக ரீதியாக படம் பண்ணும் நிலையில் அவரின் ஆரம்பகால படங்களே ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்து அவரை ரசிகர்களின் இதயசிம்மாசனத்தில் அசைக்க முடியாத உயரத்தில் உட்கார வைத்தது எனலாம். 

சினிமாவுக்கு சற்று விடுமுறை விட்டு அரசியலில் கால் பதித்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெரும் நோக்கத்தோடு தனது தொண்டர்களுடன் ஆலோசித்து வருகிறார் விஜய். அவர்களின் வழிகாட்டுதலின்படி பற்பல திட்டங்களை அரங்கேற்றி வரும் விஜய்க்கு ஒரு புது யோசனையாக அவரது வெற்றி படம் ஒன்று ரீரிலீஸ் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.

பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக விஜய் மாறி இருந்தாலும், அதற்குப்பின் அவரை மாஸ் ஹீரோவாக காட்ட ஒரு படம் தேவையாகிதான் இருந்தது. அந்த ஆசையை நிறைவு செய்யும் பொருட்டு 20 வருடங்களுக்கு முன்பு வந்த இத்திரைப்படமே விஜய்க்கு வெற்றிப் பாதை அமைத்து கொடுத்தது. 

Also read: 5 முன்னணி ஹீரோக்களின் முதல் 50 கோடி படங்கள்.. அஜித் vs விஜய், ஜெயித்தது யார் தெரியுமா?

2003 ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தூள் படத்தின் வாய்ப்பு முதலில் தளபதிக்கு சென்றதாம். கதையின் ஒரு பகுதியை மட்டும் கேட்டுவிட்டு வேண்டாம் என மறுத்த விஜய், தூள் படத்தின் வெற்றியினால் இயக்குனர் தரணியை உடும்பு பிடியாக பிடித்து நடித்த படமே கில்லி. 

“ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு! ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண்கூடு” என்று தளபதிக்கும், தளபதி ரசிகர்களுக்கும் வெற்றி வேட்கையை அதிகரித்த திரைப்படமே கில்லி. அதெல்லாம் நீ சொல்லக்கூடாது என செல்லமாக வந்த பிரகாஷ்ராஜும் வில்லத்தனத்தில் வெளுத்து வாங்கி இருந்தார். விளையாட்டில் தளபதியின் ஹீரோயிசம், தனலக்ஷ்மி உடனான காதல், நண்பர்களுடனான காமெடி, அப்பா சென்ட்டிமென்ட், ஆக்சன் என அனைத்திலும் பட்டையை கிளப்பி தளபதியின் ரசிகர்களை கும்மாளம் போட வைத்தது கில்லி. 

2004 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூலை அள்ளிய கில்லி, இன்று தளபதியின் அரசியல் பிரவேசத்தின் பொருட்டு 20 வருடங்களுக்குப் பின் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ரீரிலீஸ் செய்யப்படும் மகிழ்ச்சியான செய்தியை தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் தெரிவித்துள்ளார்.

Also read: இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு.. விஜய்யை இம்ப்ரஸ் செய்த 2 பேர், தளபதி 69 அப்டேட்

Trending News