வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய தமன்.. இதுக்கு அனிருத் எவ்வளவோ பரவால்ல

Music Director Thaman: படத்திற்கு சிறப்பு கூட்டும் பாடல்களை இசை அமைப்பதில் ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத்-க்கு இணையாக மாஸ் காட்டி வருபவர் தான் தமன். இவரின் பாடலுக்கு என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவரால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்டு வரும் சிக்கல் குறித்த தகவலை இங்கு காணலாம்.

ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத் இசைக்கு போட்டியாக விஜய்யை வைத்து வாரிசு படத்தில் வெற்றி கண்டவர் தான் தமன். தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களுக்கு ஆர்வம் காட்டி வரும் இவர் தற்பொழுது ஒரு பாடலுக்கு இத்தகைய தொகையை தயாரிப்பாளர் மீது போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: பகட்டு வாழ்க்கைக்கு அடிமையாகவும் ஐஸ்வர்யா.. ருசி கண்ட பூனையாகும் கண்ணன்

டோலிவுட்டில் இவர் பாடலுக்கு என்று எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், தனக்கென்று தனி ஸ்டூடியோ கூட இல்லாதவராக ஹோட்டல் ஹயாத்தில் தஞ்சம் அடைந்து வருகிறார். அங்கிருந்தவாறு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்தும் வருகிறார்.

சமீபத்தில் வெளியான தசரா படத்தில் ஒரு பாடலை இசை அமைத்த இவர் அப்பாடலுக்கும் சேர்த்து தன் ஹோட்டல் பில்லையும் தயாரிப்பாளர் தரப்பில் ஒப்படைத்துள்ளார். சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ள இவரின் பில்லை கண்டு இடி விழுந்தவாறு தயாரிப்பாளர் தரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டு இருக்கு!. அரசியல் தலைவர்களால் கண்டமான நடிகை

இவர் பாடலுக்கு இசையமைக்க கேட்கும் சம்பளத்தை விட இவரின் ஹோட்டல் பில் சுமார் 40 லட்சம் தயாரிப்பாளரை பீதி அடைய செய்துள்ளது. இவ்வாறு வளர்ந்து வரும் இசையமைப்பாளராய் தமனின் இத்தகைய செயல் டோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

விஜய்யின் பாடலின் வெற்றிக்கு பிறகு இவரின் நடவடிக்கை இவ்வாறு தான் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டோலிவுட்டில் சிறந்த இசையமைப்பாளர் என்ற பெயரை பெற்ற இவர் இது போன்ற செயல்களால் தன் மார்க்கெட்டை இழக்கவும் வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வருகிறார்.

Also Read: அசோக் செல்வனை டம்மி ஆக்கிய நடிப்பு அரக்கன்.. ரீ-என்ட்ரியில் நாலா பக்கமும் பாராட்டு மழை!

Trending News