ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிக் பாஸுக்கு பின் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தாமரை.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்ன தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனவர் தான் தாமரை. நாடக மேடையில் கிராமிய பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து வந்த தாமரைக்கு பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட தாமரை 80 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் பயணித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பிறகு தாமரையின் வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால் இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரித்திகா, மக்கள் மனதில் இடம் பிடித்த ஓவியா போன்றோருக்கே சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் தாமரைக்கும் ஒரு படத்தில் வாய்ப்பு வந்ததே தவிர மற்றபடி பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

Also Read : விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

இதனால் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த வகையில் விஜய் டிவியின் பிரபல தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் தான் தாமரை என்ட்ரி கொடுத்துள்ளார். இத்தொடர் விரைவில் முடிய உள்ளதாக மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாரதி கண்ணம்மா தொடரில் ஆரம்பத்தில் கண்ணம்மாவின் சித்திக்கு ஒரு தம்பி இருப்பார். அவர் எப்படியாவது கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் கடைசியில் பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : டிஆர்பி-யில் விஜய் டிவிக்கு தண்ணி காட்டும் சன் டிவி.. கிளைமாக்ஸ் காட்சியை வைத்து முன்னேறிய பாரதிகண்ணம்மா

அதன் பிறகு கண்ணம்மா மாமா கேரக்டரை அப்படியே விட்டுவிட்டார்கள். இப்போது அவருடைய மனைவியாக தான் தாமரை பாரதி கண்ணம்மா தொடரில் வர இருக்கிறார். இவரால் பாரதி கண்ணம்மா தொடரில் பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இப்போது பாரதி உண்மையை உணர்ந்து கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் பாரதியை நிராகரிக்கிறார்கள். இந்நிலையில் தாமரையால் இந்த குடும்பம் இணைய போகிறதா, பிரிய போகிறதா என்பது வரும் எபிசோடுகளில் தான் தெரிய வரும்.

bharathi-kannamma-thamarai

Also Read : யாரும் எதிர்பாராத பாரதிகண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸ்.. 2ம் பாகத்திற்கு போட்ட பிள்ளையார் சுழி

Trending News