புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீனாவை வைத்து பாண்டியன் வீட்டில் பிரச்சினை பண்ணும் சம்மந்தி.. சுக்கு நூறாக உடைந்த செந்திலின் ஆசை

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா வேலை விஷயமாக இரண்டு நாள் சென்னைக்கு போக வேண்டும் என்று பாண்டியனிடம் கேட்டார். ஆனால் பாண்டியன் எதுவும் சொல்லாமல் இருந்த நிலையில் கோமதி நைசாக பேசி பாண்டியனை சம்மதிக்க வைத்து விட்டார். இதனால் மீனா மற்றும் செந்தில் இருவரும் சென்னைக்கு போவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் திருடன் நுழைந்ததால் அனைவரின் நகைகளையும் எடுத்து பேங்க் லாக்கரில் வைத்து விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அதன்படி கோமதி அனைவரிடமும் நகை வாங்கிக் கொண்டு ராஜியை கூட்டிட்டு பேங்-க்கு போவதற்கு கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் தங்கமயிலின் அம்மா பாக்கியம் வருகிறார். இதை வைத்து எப்படியாவது நகையை வாங்கிவிடலாம் என்று தங்கமயில் நினைத்தார்.

பாண்டியனிடம் கொளுத்தி போட்ட தங்கமயில் அம்மா

ஆனால் இது தெரியாத தங்கமயில் அம்மா நீங்க வெளியில் கிளம்பினீர்களா அதை நிறுத்த வேண்டாம் நீங்கள் போய்விட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு கோமதியும் ராஜியும் போன நிலையில் தங்கமயில், அம்மாவிடம் நகையை பேங்க்ல வைப்பதற்காக தான் போகிறார்கள். இதனால் மாட்டிக்கொள்வோமோ என்று நான் பயத்தில் இருக்கிறேன் என்று சொல்கிறார்.

உடனே பாக்கியம் நீ எதுவும் கவலைப்படாதே நம்ம வீட்டில ஏதாவது ஒரு விசேஷம் என்று சொல்லி நகையே போட்டுட்டு வா என்று நான் சொல்லிக்கிறேன். அதன்படி நீ அனைத்து நகைகளையும் போட்டுட்டு வந்து என்னிடம் கொடுத்துவிடு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தங்கமயிலை சமாதானப்படுத்துகிறார்.

பிறகு செந்தில் கடையில் இருக்கும் பொழுது சென்னைக்கு போய் நாங்கள் எல்லா இடத்தையும் சுற்றி பார்க்க போகிறோம் என்ற சந்தோசத்தில் மாமாவிடமும் அங்கே இருக்கும் தாத்தாவிடமும் சொல்கிறார். இது தெரியாத பாண்டியன் கடைக்குள் நுழைந்து பின்பு மீனா வேலை விஷயமாக போன நேரத்தில் நீ சும்மா தானே இருப்ப என்று சொல்லி சில வேலைகளை அங்கே பார்க்கும்படி சொல்லி செந்திலின் ஆசையை சுக்கு நூறாக உடைக்கிறார்.

இதற்கு எதுவும் மறுப்பு தெரிவிக்காத சூழ்நிலையில் செந்தில் இருப்பதால் எல்லாத்துக்கும் தலையாட்டிக்கொண்டு அங்கேயும் போய் நான் வேலைதான் பார்க்கணுமா என்று வேதனைப்படுகிறார். இது தெரியாத மீனா வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் கோமதி, ராஜி, தங்கமயில் மற்றும் அவருடைய அம்மா இருக்கும் பொழுது சென்னைக்கு போக வேண்டியது இருப்பதால் நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கணும் என்று சொல்கிறார்.

உடனே கோமதி நீங்கள் அங்கே சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் நிறையாக இருக்கிறது என்று ஒவ்வொரு பெயராக சொல்லி அங்கே போ இங்கே போயிட்டு வா என்று மீனாவிடம் சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து வயிற்று எரிச்சலில் தங்கமயில் அம்மா மற்ற மாமியாராய் இருந்தால் இப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்கள். உண்மையிலேயே உங்களுக்கு பெரிய மனசு தான் என்று சொல்கிறார்.

அப்பொழுது பாண்டியன் வீட்டிற்கு வந்த நிலையில் பாண்டியனிடம் மீனாவும் செந்திலும் சென்னைக்கு தனியாக போகிறார்கள். அதே மாதிரி நேற்று கல்யாணமான என் மகள் மற்றும் மருமகனும் வெளியே போயிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று கொளுத்தி போடுகிறார். உடனே கோமதி அவர்கள் இருவரும் சேர்ந்து படத்துக்கு போயிட்டு வரட்டும் என்று பிளானை கொடுக்கிறார்.

இதனால் இவர்கள் இருவரும் போவதற்கு டிக்கெட் ஆன்லைனில் போடும்பொழுது 1500 ரூபாய் கிட்ட வருகிறது என்று தெரிந்ததும் பாண்டியன் வாயை பிழைக்கிறார். இருந்தாலும் சம்மந்தி சொல்லியதை தட்ட முடியாது என்பதற்காக தங்கமயில் மற்றும் சரவணன் படம் பார்க்க அனுப்பி வைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News