கடனில் சிக்கி தவிக்கும் தங்கலான், கங்குவா ரிலீஸ்.. ஞானவேல் ராஜாவுக்கு ஆர்டர் போட்ட நீதிபதி

Thangalaan: விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் தங்கலான் வரும் ஆகஸ்ட் 15 வெளியாக இருக்கிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், நீலம் ப்ரொடக்ஷன் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது.

பழங்குடி மக்கள் வெள்ளைக்காரரின் கோரிக்கையை ஏற்று தங்கத்தை தேடுவதும் அதனால் ஏற்படும் சம்பவங்களும் தான் படத்தின் கதை. இதற்காக விக்ரம் கடுமையான ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

இதன் மேக்கிங் வீடியோவில் அவர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது வெளிப்படையாக தெரிந்தது. அதேபோல் ட்ரைலர் பாடல்கள் என அனைத்துமே படத்தை காணும் ஆவலை அதிகப்படுத்தி இருந்தது.

மேலும் சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை விக்ரம் கூறியிருந்தார். அதேபோல் தற்போது பிரமோஷனும் ஜோராக நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு வரும் விக்ரம் ஆட்டம் பாட்டம் என மகிழ்வித்து வருகிறார்.

தங்கலான் வெளியிட நிபந்தனை

அதனாலேயே சோசியல் மீடியா முழுவதும் தங்கலான் ஃபீவர் தான் அதிகமாக இருக்கிறது. மேலும் படம் வெளிவருவதற்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் தற்போது ரிலீசில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஞானவேல் ராஜா அர்ஜுன் லால் சுந்தரதாஸ் என்பவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகை கடனாக பெற்றிருக்கிறார். ஆனால் அந்தத் தொகையை அவர் திருப்பி தராததால் அவரை திவால் ஆனவராக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஞானவேல் ராஜாவுக்கு அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். அதன்படி அவருடைய தயாரிப்பில் ரிலீஸ் ஆக இருக்கும் தங்கலான், கங்குவா இரண்டு படங்களின் வெளியீட்டிற்கு முன் தனித்தனியாக ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட வேண்டும்.

இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் தங்கலான் ரிலீஸ் நேரத்தில் ஏதாவது மாற்றம் அல்லது குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தங்கலான், கங்குவா ரிலீசுக்கு வந்த சிக்கல்

Next Story

- Advertisement -