சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வியர்வையை ரத்தம் மாதிரி சிந்தியதற்கு விக்ரமுக்கு கை மேல் பலன்.. தங்கலான் 6-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

Thangalaan Collection: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இரண்டு வருடம் கடின உழைப்பை கொட்டி நடித்த தங்கலான் கடந்த 15ஆம் தேதி வெளியானது. ஒட்டுமொத்த திரையுலகினரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் படம் வெளியாகி முதல் காட்சியிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை தட்டி தூக்கியது.

அதிலும் விக்ரம் என்ற நடிப்பு அரக்கன் இதைவிட சிறப்பாக நடிக்க முடியாது. பெரிய ஹீரோ என்ற எந்த ஈகோவும் இன்றி இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார். விஜய், அஜித் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற விமர்சனங்களும் எழுந்தது.

இதுவே படத்திற்கு கிடைத்த தரமான வெற்றி என விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான நாள் அன்று தேவையில்லாத சில நெகட்டிவ் விமர்சனங்களும் பரவத் தொடங்கியது.

தங்கலான் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ஆனால் உண்மையான உழைப்பிற்கு இது ஒரு தடை இல்லை என விக்ரம் நிரூபித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தேங்க்ஸ் மீட் நடந்தபோது சீயான் விரைவில் இதன் இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அந்த வகையில் இப்படம் வெளியான முதல் நாளிலேயே 26 கோடிகளை உலக அளவில் வசூலித்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது.. அதன்படி படம் வெளியான நான்கு நாட்களிலேயே 60 கோடியை தாண்டி வசூலித்து விட்டது.

அதன் தொடர்ச்சியாக தங்கலான் வெளியாகி ஆறு நாட்கள் கடந்த நிலையில் தற்போதைய மொத்த வசூல் 80 கோடியாக இருக்கிறது. இப்போதும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதனால் இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரமுக்கு கடந்த சில படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அந்த தோல்வியை அடித்து நொறுக்கி அவருடைய மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது இந்த தங்கலான்.

விக்ரம் மார்க்கெட்டை உயர்த்திய தங்கலான்

Trending News