புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மகளை வைத்து மருமகனுக்கு கொக்கி போடும் பாண்டியனின் சம்மந்தி.. அசடு வழியும் சரவணன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியன் நினைத்தபடி மூத்த மகனுக்கு பெண் அமைந்து விட்டதால் குடும்பத்துடன் பெண் பார்க்க தங்கமயில் வீட்டிற்கு போனார்கள்.

ஆனால் பாண்டியன், இந்த குடும்பத்தை பற்றி மிக உயர்வாக நினைக்கிறார்.

ஆனால் தங்க மயிலின் குடும்பம் தர லோக்கலாகவும் அடாவடித்தனமாக பேசி எதற்கெடுத்தாலும் சண்டை போடும் அராத்தாக இருக்கிறார்கள்.

இது தெரியாமல் பாண்டியன் அவர்களை முழுவதுமாக நம்பி பெண் பார்க்க போய்விட்டார். போன இடத்தில் கோமதி எங்க பையன் சரவணன் உனக்கு பிடித்திருக்கிறதா, என்று தங்கமயில் இடம் கேட்கிறார்.

அதற்கு தங்கமயில் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி சம்மதத்தை முடித்து விட்டார்கள். மேற்கொண்டு நிச்சயதார்த்தம் திருமணம் என்று பாண்டியன் குடும்பமே களைகட்ட போகிறது.

இதற்கிடையில் மகனுக்கு நல்லபடியாக பெண் கிடைத்து விட்டதால் தடபுடலாக வீட்டில் இருப்பவர்களுக்கு விருந்து சாப்பாடு ரெடி பண்ணி விட்டார் கோமதி.

பிரச்சனையை உண்டாக்க வரும் தங்கமயில்

அப்பொழுது எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் நேரத்தில் தங்க மயிலின் அம்மா பாக்கியம் பாண்டியனுக்கு போன் பண்ணுவதாக நினைத்து சரவணனுக்கு ஃபோன் பண்ணி விட்டார்.

சரவணன் போன் எடுத்ததும் பாக்கியம் உரிமையுடன் மருமகனே என்று சொல்லி தங்க மயிலிடம் போனை கொடுத்து விட்டார். இது தெரியாமல் சரவணன் ஸ்பீக்கர் ஆன் பண்ணி பேசிக்கொண்டார்.

அடுத்து தங்கமயில் பேசும் போது பக்கத்திலிருந்து இவருடைய அம்மா மாமா என்று கூப்பிடு என சொல்லிக் கொடுக்கிறார்.

அதன்படி தங்க மயிலும், மாமா சாப்பிட்டீங்களா என்று கேட்கிறார். இதை கேட்டதும் சரவணன் அசடு வழிகிறார். அத்துடன் அங்கு இருப்பவர்களும் சரவணனை இதை வைத்து ஒட்டுகிறார்கள்.

அதாவது மகளை வைத்து எப்படியாவது இந்த கல்யாணத்தை முடித்து விட வேண்டும் மருமகனுக்கு பாக்கியம் கொக்கி போட்டு விட்டார்.

ஆனால் வீட்டிற்கு மருமகளாக வந்த பிறகுதான் தங்க மயிலின் உண்மையான சுயரூபம் தெரியவரும். இதற்கு அடுத்து இவரால் என்னென்ன பிரச்சனைகள் ஆரம்பமாகப் போகிறதோ. நல்லா ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்திற்குள் கும்மி அடிக்க போகிறார்கள்.

Trending News