வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாண்டியனிடம் கையும் களவுமாக மாட்டிய தங்கமயில்.. சரவணன் வச்ச ஆப்பு, கதிர்காக பேசி அவமானப்பட்ட ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் மற்றும் சரவணன் கல்யாணத்தை பதிவு பண்ண வேண்டும் என்று பாண்டியன் சொல்லி இருக்கிறார். இதனால் ஆதார் அட்டை வேண்டும் என்பதால் எப்படியோ ஒரு வழியாக செந்தில் கையில் கிடைத்து விட்டது. ஆனால் அதில் இருக்கும் வயசு யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தங்கமயில், செந்தில் இடமிருந்தும் ஆதார் அட்டையை எடுக்க முயற்சி செய்தார்.

கடைசியில் முடியாத பட்சத்தில் ரூம்குள் போய் புலம்பித் தவிக்கிறார். அடுத்ததாக மாடியில் கதிர், செந்தில் மற்றும் பழனிச்சாமி அனைவரும் பத்தாயிரம் ரூபாய் எடுத்த விஷயத்தை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த சரவணன் என்னாச்சு யாரு அப்பா பணத்தை எடுத்து இருப்பாங்க என்று எதுவுமே தெரியாததால் கேட்கிறார்.

மருமகளை கண்மூடித்தனமாக நம்பிய பாண்டியனுக்கு வந்த ஏமாற்றம்

உடனே பழனிச்சாமி, வேற யார் எடுத்து இருப்பா எல்லாம் உனக்காக தான் கதிர் எடுத்தான் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். அப்பொழுதுதான் சரவணனுக்கு தெரிய வருகிறது ஹனிமூன் போகும்போது ஹோட்டலுக்காக கதிர் அப்பா பணத்தை எடுத்து அனுப்பி இருக்கிறார் என்று. உடனே குற்ற உணர்ச்சியில் இருந்த சரவணன் இப்பொழுதே எல்லா தவறுக்கும் நான் தான் காரணம் என்று உண்மையை அப்பாவிடம் சொல்கிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு கதிர் தடுத்து நிறுத்தி எல்லாத்தையும் நான் பார்த்து சமாளித்துக் கொள்கிறேன். நீ எதிலும் தலையிட வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் குற்ற உணர்ச்சியில் ரூமுக்குள் போன சரவணன் புலம்பிக் கொண்டே இருக்கிறார். இதை பார்த்த தங்கமயில், வயசு வித்தியாசம் உண்மை மாமாவுக்கு தெரிந்து விட்டது என்று பதட்டம் அடைய ஆரம்பித்துவிட்டார்.

உடனே நம்மளை சொல்லி மன்னிப்பு கேட்டுரலாம் என்று சரவணன் இடம் சொல்ல வரும் போது செந்தில் உள்ளே வருகிறார். அண்ணியுடன் ஆதார் அட்டை என்னிடம் தான் இருக்கிறது என்று சொல்லி சரவணன் இடம் கொடுத்துவிட்டு போகிறார். அப்பொழுது தான் தங்கமயிலுக்கு தெரிகிறது இந்த உண்மை இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்று.

பிறகு சரவணன் இடம் இருக்கும் ஆதார அட்டையை தங்கமயில் வாங்கி விடுகிறார். அடுத்ததாக பதிவு பண்ணுவதற்கு நேரம் வந்துவிட்டது என்பதற்காக பாண்டியன், மீனா செந்திலை கூட போகச் சொல்கிறார். ஆனால் தங்கமயில், மீனா வந்து விட்டால் தேவையில்லாத பிரச்சினை வந்து விடும். வயசு வித்தியாசம் உண்மையும் வெளிவந்து விடும் என்ற பதட்டத்தில் மீனா வேண்டாம் என்பது போல் பேசுகிறார்.

உடனே நாம் போவது தங்கமயிலுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்து கொண்டு எனக்கு ஆபீஸ் வேலை இருக்கிறது என்னால் போக முடியாது என்று மீனா சொல்கிறார். உடனே தங்கமயில் என்னுடைய அம்மாவை வர சொல்லி நான் போய்க்கிறேன் என்று சரவணனை கூட்டி பதிவு பண்ண போய்விடுகிறார். அங்கே பாக்கியம் போனதால் எந்த பிரச்சனையும் இல்லாமல் பதிவு பண்ணி முடித்து விடுகிறார்கள்.

இதனை தொடர்ந்து பாண்டியன் வீட்டிற்கு வந்த பொழுது கதிர் தான் 10 ஆயிரம் பணத்தை எடுத்தான் என்று கண்டுபிடித்து விடுகிறார். உடனே கோபத்தில் கதிரை வீட்டை விட்டு அனுப்புகிறார். இதை எல்லாம் பார்த்த சரவணன், தம்பி மீது எந்த தவறும் இல்லை ஹனிமூன் போகும்போது ஹோட்டல் விலையை பார்க்காமல் தங்கமயில் தவறாக புக் பண்ணிட்டார்.

அதனால் எனக்கு உதவி பண்ணும் விதமாக தான் கதிர் பணத்தை எடுத்து அனுப்பி வைத்தார் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதனால் தங்கமயிலை ஓவராக புகழ்ந்து வந்த பாண்டியனிடம் தற்போது தங்கமயில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். கதிர் சும்மா இருந்தாலும் இந்த சரவணன் மாமா சும்மா இல்லாமல் எல்லாத்தையும் உளறிவிட்டார். எனக்கு தான் மிகப்பெரிய ஆப்பு வச்சுட்டார் என்பதற்கு ஏற்ப தங்கமயில் திருட்டு முழி முழிக்கிறார்.

பாவம் இது எதுவும் தெரியாத ராஜி, கதிர் எந்த தவறும் பன்னிருக்க மாட்டார் என்பதற்கு ஏற்ப பாண்டியனிடம் சப்போர்ட் பண்ணி பேசினார். ஆனால் இப்பொழுது அண்ணனுக்காக கதிர் தான் பணத்தை திருடி இருக்கார் என்று ராஜிக்கு தெரிந்ததும் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து போய் அவமானத்தில் நிற்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News