Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் காதலித்த பெண்ணை மறந்து பாண்டியன் சொல்வதைக் கேட்டு வீட்டு சம்மதத்துடன் கல்யாணம் பண்ணினதால் பாண்டியன் சரவணன் மட்டும் தான் என் பெத்த பையன். அவன் மட்டும் தான் நான் சொல்வதைக் கேட்டு பணிவுடன் நடந்து கொள்கிறான் என்று அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்.
அதே மாதிரி தங்கமயில் நான் பார்த்து தேடி கூட்டிட்டு வந்த மருமகள். குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்கிறார் என்று தங்கமயிலுக்கு ஜால்ரா அடித்து, உலகத்தில் இல்லாத மருமகளாக இருப்பது போல் பெருமை பேசிக் கொள்கிறார். ஆனால் தங்கமயில் மற்றும் பாக்கியம் இருப்பதிலேயே பொய்ப்பித்தலாட்டம் பண்ணி பாண்டியன் தலையில் மிளகாய் அரைத்து குடும்பத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
பாண்டியன் முகத்தில் கரிய பூச போகும் தங்கமயில்
அது மட்டுமா பாக்கியம் கொடுத்த ஐடியாவை ஃபாலோ பண்ணி தங்கமயில் சரவணனை அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும். அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை குறைக்க வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார். இது தெரியாத பாண்டியன், சரவணன் மற்றும் தங்கமயில் ஹனிமூன் அனுப்புவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார்.
ஆனால் செந்தில் மற்றும் கதிரை ஓரவஞ்சகத்துடன் வெறுத்து ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று கோமதி நியாயம் கேட்கிறார். அதன்படி இவர்கள் அனைவரையும் ஹனிமூன் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பாண்டியனிடம் கொந்தளித்து பேசி இருக்கிறார். இதற்கு இடையில் கதிர் டிரைவராக வேலைக்கு போய் கொஞ்சம் கூட நேரம் இல்லாமல் உழைத்து வருகிறான் என்று கோமதி ஆவேசத்துடன் பாண்டியனிடம் பேசினார்.
அப்பொழுது பாண்டியன், கோமதி ரொம்ப டார்ச்சர் பண்ணுவதால் கதிர் அவன் இஷ்டப்படி ஃபுட் டெலிவரி பண்ணட்டும். ஆனால் சனி ஞாயிறு டிரைவராக போவதற்கு பதிலாக என்னுடன் கடையில் வந்து வேலை பார்க்க சொல் என்று கோமதிடம் சொல்லிவிட்டார். இதை கேட்டதும் கோமதி, ஏதோ கதிருக்கு பெரிய நல்லது செய்து விட்டது போல் ஓவராக அலட்டிக் கொள்கிறார்.
ஆனால் ராஜிக்கு இது நல்லாவே தெரியும், கதிர் எந்த காரணத்தை கொண்டும் பாண்டியன் கடைக்கு போய் வேலை பார்க்க மாட்டான் என்று. இதனால் மறுபடியும் தேவையில்லாத பிரச்சினை குடும்பத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று மீனாவிடம் புலம்புகிறார். அதன்படி கதிர் வந்ததும் கோமதி நீ அப்பா கடையில் போய் சனி ஞாயிறு வேலை பாரு என்று சொல்கிறார்.
அதற்கு கதிர், என்னை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். என்னை எப்படி பார்த்துக்கணும் எனக்கு தெரியும் என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்கிறார். இதை பாண்டியன் கேட்ட நிலையில், கோமதியிடம் சண்டை போடுகிறார். இவனை பற்றி தெரிஞ்சும் என்னிடம் வக்காலத்து வாங்கி பேசினாய். இப்பொழுது கதிர் என்ன திமிரில் எப்படி சொல்கிறான் என்று உனக்கு புரியலையா என மறுபடியும் பாண்டியன் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் கதிரையும் வழக்கம்போல் திட்டிவிட்டு போய்விடுகிறார். இப்படி ஓவர் அராஜகம் பண்ணி வரும் பாண்டியனுக்கு சரியான ஆப்பு வைக்கும் விதமாக தங்கமயில் குடும்பத்துடன் ஏமாற்றி ஒட்டு மொத்தமாக கவுக்கப் போகிறார். அப்பொழுதுதான் வீட்டில் பார்த்த மருமகள் தங்கமயிலுக்கும், வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்த மீனா மற்றும் ராஜியின் அருமை புரிய போகிறது. இதனை தொடர்ந்து மாமியாருடன் ஒட்டிக்கொண்டு மீனா மற்றும் ராஜியின் காம்போ படு ஜோராக இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- தங்கமயில் போட்ட பிளானை ஊத்தி மூடிய கோமதி
- மீனாவிடம் உதவி கேட்ட ராஜி, வாயடைத்துப் போன பாண்டியன்
- பாண்டியன் கொடுத்த அதிர்ச்சி, பிக்னிக் போக போகும் மருமகள்கள்