ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கதிரை பாண்டியனிடம் மாட்டிவிட்டு உல்லாசமாக இருக்கும் தங்கமயில்.. புருஷனுக்காக உண்மையை சொல்லும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் செய்த பித்தலாட்டத்தால் சரவணன் ஹோட்டலில் தங்க முடியாமல் பணத்துக்காக தவித்தார். அப்பொழுது யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்த நிலையில் செந்தில் மற்றும் கதிரிடம் போன் பண்ணி விவரத்தை சொல்கிறார். அந்த வகையில் இருவருமே சரவணன் இடம் பணத்தை ஏற்பாடு பண்ணி அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

செந்திலுக்கு யாரிடம் பணத்தைக் கேட்கலாம் என்று தெரியாத நிலையில் மீனாவிடம் பணம் கேட்டார். மீனாவும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல் ஏடிஎம் கார்டு கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். ஆனால் அதன் பின் தங்கமயில் மற்றும் சரவணன் தங்குவதற்கு ஹோட்டல் செலவுக்கு பணம் என்று தெரிந்த நிலையில் நான் எதற்கு கொடுக்க வேண்டும் என்று ஏடிஎம் கார்டை திருப்பி புடுங்கி விட்டார்.

ராஜி செய்யப் போகும் சம்பவம்

பிறகு கதிர் அவரிடம் இருந்து 5000 ரூபாய் எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு போகிறார். அங்கே அப்பா போனில் இருந்து பத்தாயிரம் ரூபாய் ட்ரான்ஸ்பர் பண்ணி கொள்கிறார். மீதம் ஆயிரம் ரூபாயை கடையில் கல்லாப்பெட்டியில் இருந்து எடுத்துக் கொள்கிறார். இது தெரிந்தால் ரொம்ப பிரச்சினையாகும் என்று செந்தில் சொல்கிறார்.

அதற்கு எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி சரவணனுக்கு பணத்தை கொடுத்து விடுகிறார். இதனால் சரவணன் அந்த ஹோட்டலில் பணத்தை கொடுத்துவிட்டு தங்கமயிலை கூட்டிட்டு தங்கி விடுகிறார். பிறகு தங்கமயிலுக்கு பாக்கியம் போன் பண்ணி நடந்த விஷயத்தை பற்றி நினைக்காமல் சந்தோஷமாக இருந்துட்டு வாங்க என்று சொல்கிறார்.

அதன்படி தங்கமயிலும், சரவணன் இடம் எல்லா பிரச்சனையும் மறந்து மூன்று நாள் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கலாம் என்று சொல்கிறார். இதை கேட்டு சரவணன் தலையாட்டி தங்கமயில் உடன் உல்லாசமாக இருக்கிறார். ஆனால் இந்த பிரச்சனை எல்லாம் பாண்டியனுக்கு தெரிய வரும்பொழுது இதற்கெல்லாம் காரணம் கதிர் தான் என்று தவறாக புரிந்து கொள்வார்.

கதிரும் ஏன் எதற்காக எடுத்தோம் என்று சொல்லாமல் நான்தான் பணத்தை எடுத்தேன். எனக்கு பணம் தேவைப்பட்டது அதனால் தான் எடுத்தேன். கூடிய சீக்கிரத்தில் உங்களிடம் இருந்து எடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார். ஆனாலும் பாண்டியன் கதிரை மட்டும் தட்டி அனைவருக்கும் முன்னாடியும் திட்டி பிரச்சினை பண்ணுவார்.

இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத ராஜி உண்மை தெரிந்து கொண்ட நிலையில் அனைவரது முன்னாடியும் எதற்காக கதிர் பணத்தை எடுத்தார் என்ற உண்மையை போட்டு உடைக்க போகிறார். ஆனால் தன்னுடைய சந்தோஷத்திற்காக தம்பிகளை பலிகடாக ஆக்கிவிட்டு சந்தோசமாக இருக்கும் சரவணனுக்கு தங்கமயில் பற்றி உண்மை எதுவும் தெரியாததால் பாக்கியம் போட்ட பிளான் படி சரவணன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்து விடுவார்.

பாவம் இதற்கிடையில் மாட்டிக்கொண்டு கதிர் தான் அவஸ்தை பட்டு வருவார். ஆனால் ராஜி இருக்கும் வரை கதிருக்கு எந்தவித கஷ்டமும் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப புருஷனுக்காக வக்காலத்து வாங்கி பேச தயாராகி விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News