Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி யாரிடமும் சொல்லாமல் டியூஷன் எடுத்தது தவறாக இருந்தாலும் அதற்காக ஏதோ வீட்டில் அசம்பாவிதமே நடந்து விட்டது என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரியாக்ஷன் கொடுத்துட்டு வருகிறார்கள். இதை பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப தற்போது இந்த நாடகத்தின் விறுவிறுப்பு குறைந்துவிட்டது.
வந்த வேகத்தில் இருந்த பரபரப்பு தற்போது இந்த நாடகத்தில் இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் தங்கமயில் மற்றும் மீனாவின் கணவராக வந்திருக்கும் வெங்கட். மீனாவிற்கு ஏற்ற ஜோடியாக செந்தில் கேரக்டரில் வெங்கட் முதல் பாகத்தில் நடித்திருந்தாலும் இரண்டாவது வம்சி செந்தில் கேரக்டரை கச்சிதமாக நடித்து மீனாவுக்கு ஏற்ற ஜோடியாகவும் பெயர் வாங்கினார்.
கோமதியிடம் சிபாரிசு பண்ணும் தங்கமயில்
ஆனால் அவருக்கு பதிலாக வெங்கட் வந்தது பார்ப்பவர்களின் எண்ணிக்கையை குறைந்துவிட்டது. அது மட்டும் அல்லாமல் தங்கமயில் ஏமாற்றிய விஷயங்களில் மாட்டுவார் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு நாளும் ஏமாற்றமாகவே அமைந்து வருகிறது. அதிலும் இந்த தங்கமயில் தான் நல்ல மருமகள் பொறுப்பானவள் என்று பாண்டியன் ஓவராக தலையை தூக்கி வைத்து ஆடுவது இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக வந்துவிட்டது.
அதோடு இல்லாமல் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜி மற்றும் கதிர் கேரக்டர் தான் மக்களை பார்ப்பதற்கு ஆர்வமாக தூண்டியது. ஆனால் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதை தற்போது வேற ட்ராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இப்படி நிறைய நெகட்டிவ் கருத்துக்கள் இருந்தாலும் மீனா, ராஜி மற்றும் கோமதியின் காம்போ பார்ப்பதற்கு நன்றாக அமைந்திருந்தது.
ஆனால் தற்போது அதுவும் இல்லை என்பதற்கு ஏற்ப கோமதி, மீனா மற்றும் ராஜியிடம் பேசாமல் ஒதுக்கி வருகிறார். இதில் தான் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக தங்கமயில், கோமதியிடம் சிபாரிசு பண்ணி மீனா மற்றும் ராஜியிடம் பேச வைத்தது பார்ப்பதற்கு சகிக்கவே இல்லை. ஒருவேளை தங்கமயில் நிஜத்திலேயே நல்ல கேரக்டராக கொண்டு வந்தாலும் பாக்கியம் சும்மா விட மாட்டார்.
ஏதாவது தேவையில்லாமல் சொல்லி குடும்பத்தை பிரிப்பதற்கு வழி பார்ப்பார். இதையெல்லாம் தாண்டி மீனா தான் செய்தது தவறுதான் என்பதற்கு ஏற்ப எல்லாத்தையும் மறந்து பாண்டியனிடம் பேச போனாலும் பாண்டியன், மீனாவை கண்டு கொள்ளாமல் ஓவராக ஆடுகிறார். இப்படியே ஒவ்வொருவரும் மூஞ்சியை தொங்க போட்டுக்கொண்டு இருப்பதால் நாடகத்தின் சுறுசுறுப்பு குறைந்துவிட்டது. இதற்கு பிறகு கதிர் மற்றும் ராஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் இருக்க வேண்டும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பாண்டியன் கொட்டத்தை அடக்க சரியான ஆளு இந்த மருமகள் தான்
- மீனா ராஜியை ஒதுக்கி தகரமயிலுடன் கூட்டணி போட்ட கோமதி
- மருமகளுக்கு செல்லம் கொடுக்கும் பாண்டியன்