Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் தற்போது பாண்டியன் வீட்டில் இரண்டு விஷயங்களால் தவித்துக் கொண்டு வருகிறார். ஒன்று போலி நகைகளை கொண்டு வந்திருப்பதால் யாருக்காவது உண்மை தெரிந்து விடுமோ நம்ம மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் இருக்கிறார். இன்னொன்று படிக்காமலேயே எம் ஏ இங்கிலீஷ் படித்திருக்கிறோம் என்று பொய் சொல்லிய நிலையில் நம்மை வேலைக்கு போக சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
அதிலும் இல்லாத சர்டிபிகேட் வேற கொண்டுட்டு வா என்று கேட்டதால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் தங்கமயில் அவருடைய அம்மா மற்றும் அப்பாவிடம் போய் புலம்பினார். உடனே அப்பா இதற்கு ஒரே தீர்வு இன்னைக்கு இரவு உங்க வீட்டுக்கு திருடன் போல வந்து உன்னுடைய போலி நகையும் இல்லாத சர்டிபிகேட்டையும் எடுத்துட்டு வந்து விடுகிறேன்.
அதன்பிறகு திருடன் யாரோ வந்தாங்க வந்தவங்க நகையும் சர்டிபிகேட்டையும் எடுத்துட்டு போயிட்டாங்க என்று சொல்லி எல்லாரையும் நம்ப வைத்து விட்டால் நீ போலி நகையை கொண்டு போனதும் தெரியாது, சர்டிபிகேட் இல்ல அதனால வேலைக்கு போற டார்ச்சரும் பண்ண மாட்டார்கள் என்று ஐடியா கொடுத்து விட்டார். அதன்படி பாண்டியன் வீட்டில் அனைவரும் சேர்ந்து தூங்கிய நேரத்தில் தங்க மயிலின் அப்பா திருடுவதற்கு வந்து விட்டார்.
அப்படி உள்ளே நுழைந்த பொழுது பழனிச்சாமி திருடன் யாரோ உள்ளே நுழைந்து விட்டார் என்று கத்த ஆரம்பித்து விட்டார். உடனே தங்கமயிலின் அப்பா அங்கே இருந்து தப்பித்து எதிர்த்த வீட்டில் இருக்கும் கோமதி அண்ணன்கள் வீட்டிற்கு போய் ஒளிந்து கொண்டார். பிறகு பாண்டியன் வீட்டில் திருடன் திருடன் என்று சத்தம் போட்டு கூப்பிட்டதில் எதுத்த வீட்டில் இருந்த அம்மாச்சி மற்றும் அனைவரும் எழுந்து விட்டார்கள்.
உடனே நம்ம வீட்டுக்கு யாரும் வந்திருப்பாங்களா என்று செக் பண்ணி பார்க்கலாம் என ராஜின் அப்பா முத்துவேலு, சக்திவேல் மற்றும் குமரவேலு வீட்டை சுற்றி பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும் பொழுது தங்கமயிலின் அப்பாவை பார்த்து விடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் தங்க மயிலின் அப்பா முகத்தை மூடி கொண்டதால் திருடன் என்று நினைத்து அடித்து விட்டார்கள்.
பிறகு முகத்தை பார்த்த நிலையில் இது சரவணன் மாமனார் என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது. உடனே சக்திவேல் மற்றும் முத்துவேலு என்ன விஷயம் என்று கேட்ட நிலையில் தங்கமயிலின் அப்பா அவர்கள் செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தையும் ஒப்பித்து விட்டார். உடனே இதுதான் சான்ஸ் என்று இவரை வைத்து ஏதாவது பிளான் போட்டு பாண்டியன் குடும்பத்தில் பிரச்சினை பண்ணி அதன் மூலம் சந்தோஷப்பட்டு கொள்ளலாம் என்று டிராமாவை போட தயாராகி விட்டார்.
அந்த வகையில் இவர்களிடம் சிக்கிக் கொள்ளப் போகும் பாண்டியன் குடும்பம் இன்னும் என்னெல்லாம் கஷ்டப்பட போகிறார்களோ தெரியவில்லை. அந்த வகையில் பாண்டியனின் மகள் அரசியை தான் முதல் பலியாடாக சிக்க வைக்கப் போகிறார்கள்.