புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜெயம் ரவிக்கு தலைவலியாய் மாறிய அண்ணன்.. அரவிந்த் சாமியால் சிக்கலில் தனி ஒருவன் 2

Thani Oruvan 2: ஜெயம் ரவி, அரவிந்த்சாமி காம்போவில் மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் வரலாறு காணாத வெற்றி பெற்றது. அதனாலேயே இப்போது இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது. இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இப்போது படத்திற்கு புது சிக்கல் ஒன்று முளைத்திருக்கிறது.

அதுவும் அரவிந்த் சாமியால் என்பது நம்ப முடியாத ஆச்சரியமாக இருக்கிறது. அதன்படி மோகன் ராஜா வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார். ஆனாலும் அவருக்குள் ஒரு பெரிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறதாம்.

அதாவது முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிக்கப்பட்டதோடு வரவேற்கவும் பட்டது. இன்னும் சொல்லப்போனால் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததே அரவிந்த்சாமி தான். அவரை தவிர வேறு யாரும் இப்படி நடித்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்த கதாபாத்திரம் இருந்தது.

Also read: சைரன் படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம்.. தனி ஒருவன் போல் வெற்றிக்காக எடுத்த அதிரடி முடிவு

ஆனால் முதல் பாகத்தில் அந்த கேரக்டர் இறந்துவிடும். அதனால் இரண்டாம் பாகத்தில் அதற்கு ஈடான ஒரு வில்லன் ரோல் இடம்பெற வேண்டும். அப்படி என்றால் அதற்கு நிகரான நடிகரும் வேண்டும். அந்த ஒரு தலைவலி தான் இப்போது மோகன் ராஜாவுக்கு அதிகமாக இருக்கிறது.

ஹீரோவையே மிஞ்சும் அளவுக்கு இருக்கும் வில்லனை தான் அவர் இப்போது சல்லடை போட்டு தேடி வருகிறாராம். ஆனால் யாரையும் இன்னும் அவர் உறுதி செய்யவில்லை. ஜெயம் ரவியும் இப்படத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.

ஆனால் தனி ஒருவன் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்குமா என்ற சூழலும் இருக்கிறது. போற போக்க பாத்தா மக்கள் நம்மள மறந்திடுவாங்களோ என்ற கவலையும் ஜெயம் ரவிக்கு வந்து விட்டதாம். ஆக மொத்தம் அரவிந்த்சாமிக்கு இணையான ஒரு நடிகரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஷூட்டிங் என்ற முடிவில் மோகன் ராஜா இருப்பது புது டிவிஸ்டாக உள்ளது.

Also read: தனி ஒருவன் 2ல் சித்தார்த் கேரக்டரில் நடிக்க தேர்வான 5 ஹீரோக்கள்.. வாய்ப்பை தட்டி தூக்கிய வாரிசு நடிகர்

Trending News