திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கணவர் மீது கடும் கோபத்தில் விவாகரத்து நடிகை.. வாடகைத்தாய் குழந்தையால் வந்த விபரீதம்

திருமணத்திற்கு பிறகு கூட சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அந்த பிரபல நடிகை. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் சில வருடங்களுக்கு முன் உருகி உருகி காதலித்த அந்த நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கூட நடிகை படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை மீடியாவில் தொடர்ந்து வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார். பெரிய குடும்பத்து மருமகள் ஆகிவிட்ட பிறகு கூட நடிகை இப்படி செய்வது பல விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதைப் பார்த்த பலரும் இது எங்க போய் முடியப் போகுதோ என்று நினைத்த வேளையில் சில மாதங்களுக்கு முன் நடிகை கணவரை விவாகரத்து செய்யப்போவதாக திடீரென அறிவித்தார். இது அவரது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

சமீபகாலமாக நடிகையின் போக்கு அவ்வளவாக சரி இல்லாதது தான் இந்த முடிவுக்கு காரணம் என பல யூகங்கள் கிளம்பியது. அதுமட்டுமல்லாமல் நடிகை குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது வேண்டுமென்றால் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பிடிவாதமாக இருந்தாராம்.

இதுதான் பெரிய பிரச்சனையாக மாறி தற்போது விவாகரத்து வரை வந்து விட்டதாக சிலர் சொல்கின்றனர். ஆனால் நடிகையோ பிரிவுக்குப் பிறகு தான் சுதந்திர பறவையாக திரிந்து கொண்டிருக்கிறாராம். குத்துப் பாடலுக்கு ஆடுவது, சரக்கு விளம்பரத்தில் நடிப்பது என்று நடிகை தன் போக்கில் சுதந்திரமாக இருக்கிறார்.

இதைப் பார்த்து கடுப்பான கணவர் நடிகைக்கு போன் செய்து கடுமையாக பேசியிருக்கிறார். நண்பர்களாக இருப்போம் என்று பிரிவுக்கு பிறகும் கணவருடன் அவ்வப்போது போனில் பேசி வந்த நடிகைக்கு தற்போது அளவுக்கு மீறி கோபம் வந்துவிட்டதாம். இதனால் தற்போது கணவர் எத்தனை முறை போன் செய்தாலும் நடிகை கால் அட்டன்ட் செய்யாமல் கட் செய்து விடுகிறாராம்.

Trending News