புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறனுக்கு பயத்தை காட்டிய விஜய் சேதுபதி.. போட்ட பிளான் எல்லாம் இப்படி சொதப்பிடுச்சே

விஜய் சேதுபதி தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு மாறி மாறி நடித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் மாதத்திற்கு ஒரு படம் என்று இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் ரிலீஸாக காத்துக் கொண்டிருக்கிறது.

அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படமும் ஒன்று. இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வந்த விஜய் சேதுபதி தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனால் அவருடைய பல காட்சிகள் எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்த படத்தை மிக குறுகிய காலத்திலேயே எடுத்து முடித்து விட்டு அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று ஒரு கணக்குப் போட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் இப்போது விஜய் சேதுபதி மீதியுள்ள காட்சிகளை முடிக்காமல் இழுத்தடித்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

இதற்கிடையில் வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை ஆரம்பிக்க இருந்தார். ஆனால் அவர் இப்படி தாமதித்து வருவதை பார்த்த சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார். அந்தப்படமும் விரைவிலேயே ஷூட்டிங் முடிய இருக்கிறது. அதையடுத்து சூர்யாவின் நடிப்பில் இன்னும் சில திரைப்படங்களும் உருவாக இருக்கிறது.

இதனால் எங்கே வாடிவாசல் திரைப்படத்தை ஆரம்பிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் வெற்றிமாறன் இருக்கிறார். அதனால் விஜய் சேதுபதியின் மேல் கடுப்பில் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர் இருக்கிறார்.

ஏனென்றால் இதைப் பற்றி பேசப் போய் மனுசன் ஷூட்டிங்குக்கு வராமல் இன்னும் நாட்களை கடத்தி விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான். அதனால் விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அமைதியாக இருக்க வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார்.

Trending News