சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்ச ஹீரோயின்.. ஹீரோ கொடுத்த அட்வைஸ்

சின்னத்திரை சீரியல்களை பொருத்தவரையில் ஒரு சில ஹீரோக்களுக்கு தான் பெரிய திரை அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். அப்படித்தான் பிரபல சேனலின் ஒரு அங்கமாக இருக்கும் அந்த சைலன்ட் நடிகருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருக்கின்றனர்.

அதனாலேயே அந்தப் பூ சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதிலும் ஹீரோயின் உடன் இவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி கொண்டாடப்பட்டது. இப்படி இருந்தும் கூட நடிகர் திடீரென சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். இதனால் சீரியலின் போக்கும் தடுமாறியது.

அதை தொடர்ந்து அதற்கு எண்டு கார்டு போட்ட சேனல், நடிகரை மீண்டும் அழைத்து வந்து ஒரு சீரியலை தொடங்கியது. நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த சீரியலில் நடிகருடன் ஜோடி போடும் நடிகையும் வந்த புதிதில் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து வந்தார்.

Also read: நடிகையின் தோழியை கரெக்ட் செய்த ஹீரோ.. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஹீரோயின்

ஆனால் இப்போதெல்லாம் அவர் மீடியாவை பார்த்தாலே அமைதியாக இடத்தை காலி செய்து விடுகிறாராம். பேட்டி வேண்டும் என்று கேட்டால் கூட ஏதாவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி எஸ்கேப் ஆகி விடுவதாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் நடிகரை தான் கைகாட்டுகின்றனர்.

அந்த ஹீரோ தான் மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவில்லை என்றால் தேவையில்லாத வம்பு வரும் என நடிகைக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அதனாலயே இப்போது அந்த ஹீரோயின் மீடியாவை ஓரங்கட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும.. ஊருக்கு முன் பத்தினி வேஷம் போடும் நடிகையின் வண்டவாளம்

Trending News