திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

விவாகரத்து நடிகரை விடாமல் துரத்தும் நடிகை.. கேரியரை முடிக்காமல் விட மாட்டாங்க போல

விவாகரத்து அறிவிப்பை அறிவித்ததில் இருந்தே அந்த நடிகருக்கு நேரமே சரியில்லை. அவரைப் பற்றிய சர்ச்சைகள் ஒரு புறம் பரவி வந்தாலும் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்களும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் அந்த நடிகர் இருக்கிறார். இந்நிலையில் வாரிசு நடிகை அந்த நடிகருடன் எப்படியாவது இணைந்து ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம்.

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அந்த வாரிசு நடிகை சில வருடங்களுக்கு முன்பு நடித்த அந்த திரைப்படம் அவருக்கு ஏகப்பட்ட விருதுகளை வாங்கி கொடுத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் கிடைத்தது.

ஆனால் சமீப காலமாக நடிகை நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி வருகிறது. ரிஸ்க் எடுத்து நடித்த திரைப்படங்கள் கூட அவருக்கு கை கொடுக்காத நிலையில் நடிகை ரொம்பவும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். இருப்பினும் நடிகையை தங்கள் படங்களில் புக் செய்வதற்கு பல தயாரிப்பாளர்களும் முன்வருகின்றனர்.

ஆனாலும் நடிகை விவாகரத்து நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். நடிகையின் ராசியை பற்றி அறிந்த பல நடிகர்களும் அவர் ஹீரோயின் என்றால் வேண்டவே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகிறார்கள்.

அதனால் நடிகை தற்போது விவாகரத்து நடிகரின் சில வீக்ன்ஸ்களை தெரிந்து கொண்டு டார்ச்சர் செய்து வருகிறாராம். ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் ஊற்றிக் கொண்ட நிலையில் இப்போது விவாகரத்து நடிகர், நடிகையிடம் இருந்து எப்படி எஸ்கேப் போகலாம் என்று யோசித்து வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News