தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கி அதன் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார்.
அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியிலும் இது பேசுபொருளானது. அந்தளவுக்கு விஜயின் மேடைப் பேச்சு மட்டுமல்ல, வந்திருந்த தொண்டர்களின் கூட்டமும் பிரம்மிப்பை ஏற்படுத்தியது.
இந்த மாநாடு நடத்த பல தடைகள் வந்த போதிலும், தள்ளிப் போன போதிலும் தவெக தலைவர் விஜய், விடாமல் தடைகளை உடைத்து சொன்னபடியே முதல் மாநாட்டை நடத்திக் காட்டினார்.
தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுகு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமையை அலுவலகத்தில், அவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட தவெக நிர்வாகிகளுக்கும் விருந்து கொடுத்த விஜய்யை பலரும் பாராட்டி வரும் நிலையில் அவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து மாநாட்டுக்கு நிலம் கொடுத்த ஒரு விவசாயி கூறியதாவது:
”விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக நான் 4 ½ ஏக்கர் நிலம் கொடுத்தேன். எங்களுக்கு 45 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்கள். அந்த மாநாட்டின் பூஜை பூஜை போடும்போதும் எங்களுக்கு வெத்தலை, பாக்கு வைச்சு கொடுத்து அன்று காலையில் டிஃபன் கொடுத்தார்கள்.
மாநாட்டில் நடக்கும் முன்பே எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டார்கள். அந்த இடத்தில் 500 மீட்டரில் விசாயிகள் உள்ளிட்ட ஜீவராசிகள் எதுவும் பாதிக்கப்பட கூடாது என்று லைட்டிங் அரெஸ்டிங் என்ற ஒன்று கொண்டு வந்து, இடி, மின்னலால் தாக்கக் கூடாது என பார்த்து அதைப் பண்ணியிருக்கிறார்கள். இதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்தா ஊரில் உள்ள பலர் நிலம் கொடுத்திருந்தாலும், பல கட்சிகள் அந்த இடத்தில் மாநாடு நடந்தாலும், விஜயின் தவெக கட்சி எங்களை சிறப்பாக நடத்தினர். எங்களை பஸ்ஸில் அழைத்து வந்து, காலையிலும் டிஃபன் கொடுத்து, மதியமும் விருந்து விருந்து கொடுத்ததுடன், நீங்கள் இடம் கொடுக்கவில்லை என்றால் என்னால் மாநாடு நடத்தியிருக்க முடியாது என விஜய் கூறியதாகவும் நேற்றையை நிகழ்ச்சியில் எங்கள் எல்லாரின் குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்.
வந்திருந்த அனைவரும் விஜய்யுடன் குடும்பமாக குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம். நாங்கள் கொடுத்த மாதிரி திரும்ப அந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், இடம் வழங்கிய விவசாயி ஒருவருக்கு வழங்கிய மாடு சரியாக பால் கறப்பதில்லை எனப் புகார் எழுந்த நிலையில் அவருக்கு புதிய வாங்கிக் கொடுத்தார் விஜய். அதேபோல், தவெக மாநாட்டில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஸ்வநாதனுக்கு விஜய் தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.