வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித் போன் பண்ணியும் கால் எடுக்காத நடிகர்கள்.. இதனால் தான் யாரையும் மதிப்பதில்லை ஏகே

Actor Ajith: இப்போது இருக்கும் அஜித் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த அஜித் போல் கிடையாது, அவர் யாருடனுமே ஒட்டுவதில்லை. வெறும் படங்கள் மட்டுமே நடிக்கிறாரே தவிர எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. ஆனால் அவருடைய நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமியின் மறைவுக்கு மட்டும் வந்திருந்தது பலருக்கும் வியப்பளித்தது

அஜித் இந்த அளவிற்கு கோடு போட்டது போல் வாழ்வதற்கு காரணம் என்ன? எதற்காக அவர் திரையுலகில் இருக்கும் பிரபலங்களை ஒதுக்குகிறார்? என்பதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு ‘பாசத் தலைவருக்கு பாராட்டு’ என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் அஜித் ரொம்பவே துணிச்சலுடன் கலைஞர் முன்பே, ‘சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகளை விழாக்களுக்கு வர சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள். எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள்’ என்று பேசினார்.

Also read: லாரன்ஸ்- ரஜினி போட்ட ஒப்பந்தம்.. மகள்களுக்காக ஆலமரம் போல் நிற்கும் தலைவர்

அஜித்தை மாற்றிய சம்பவம்

இதை கேட்டதும் கலைஞர் அருகில் அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக எழுந்து நின்று கை தட்டினார். ஆனால் அப்படி பேசியதால் அஜித்துக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டதோடு நிறைய மிரட்டல்களும் வந்தது. அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாத அஜித், அப்போ உள்ள பெரிய நடிகர்களுக்கு கால் செய்தார்.

ஆனால் எந்த நடிகர்களும் அவருடைய தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. அப்போ அஜித் ரொம்ப வருத்தப்பட்டுள்ளார். ‘உங்களுக்காகத்தான் பேசினேன். ஆனால் நீங்கள் எல்லோரும் பயந்து என்னை அவாய்ட் பண்றீங்கன்னு’ வருத்தப்பட்டார். அந்த நொடி முதல் தமிழ் சினிமா நடிகர்களை தூக்கி எறிந்தார். இப்போது வரை யாரையும் கண்டுக்கிறது இல்லை.

‘ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன்’ என்பார்கள், அப்படித்தான் அஜித் கஷ்டமான சூழ்நிலையை சந்தித்த சமயத்தில் திரை பிரபலங்கள் யாருமே உதவவில்லை. அதனால் அவர்களை எல்லாம் இப்போது தூக்கி எறிந்து விட்டார். தன்னுடைய ரசிகர்களுக்காகத்தான் வருஷத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து அவர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். ஒருவேளை அஜித்க்காக அன்று திரையுலகம் நின்றிருந்தால், இன்று சினிமா நடிகர்களுக்காக அஜித் என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்.

Also read: சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்

Trending News