That one word MGR said about Vijayakanth: சினிமா மூலம் இரண்டு பொக்கிஷங்கள் மக்களுக்கு கிடைத்தது. சினிமாவிலும் அரசியலிலும் பெரும் புகழையும் சம்பாதித்ததோடு மட்டுமில்லாமல் மக்கள் மனதையும் வென்றவர் தான் எம்ஜிஆர். அதுபோலவே எம்ஜிஆரை தன்னுடைய கடவுளாக மனதில் எண்ணி ஒவ்வொரு விஷயத்தையும் விஜயகாந்த் செய்து வந்தார். அதனால் தான் இவரை கருப்பு எம்ஜிஆர் என்றும் மக்கள் கூப்பிட ஆரம்பித்தார்கள்.
இதற்கிடையில் விஜய்காந்தை பற்றி எம்ஜிஆர் மனதிலும் ஒரு விஷயம் தோன்றுகிறது. பொதுவாக இரவு நேரத்தில் எம்ஜிஆர் வெளியே போவது வழக்கம். அப்பொழுது போகும் போதெல்லாம் ரோடு வேலை செய்பவர்களிடம் நின்னு பேசிவிட்டு தான் வருவார். அதே போல் ஒரு நாள் ரோட்டில் விஜயகாந்த் படத்திற்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
இதை பார்த்த எம்.ஜி.ஆர், பக்கத்தில் இருக்கும் நபரிடம் விஜயகாந்துக்கு எனக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே இருக்கிறார்கள். அவன் அரசியலுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எம்ஜிஆர் விஜயகாந்த் பற்றி சொல்லி இருக்கிறார். அதே மாதிரி விஜயகாந்தும், ஒரு பேட்டியில் நான் எம்ஜிஆர் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். அவர் மீது இருந்த ஒரு அபிப்பிராயத்தில் தான் சினிமாவிற்கு நுழைந்தேன் என்று கூறியிருக்கிறார்.
Also read: எம்ஜிஆர், சிவாஜியை விட அதிக நாள் வாழ்ந்திருக்கிறேன்.. பெருமிதம் கொள்ளும் நடிகர்
ஆனால் இதுவரை அவரை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் அதற்கு பதிலாக ஜானகி அம்மாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் ஜானகி அம்மா என்னிடம் சொன்னது உங்கள் நடிப்பில் வெளிவந்த உழவன் மகன் படத்தை எம்ஜிஆர் அடிக்கடி பார்த்து ரசிப்பார். அதில் மாட்டுவண்டி ஓட்டு கொண்டு வரும் பாடல் காட்சியை கண் இமைக்காமல் பார்த்து மகிழ்வார் என்று கூறியிருக்கிறார்.
இதை ஜானகி அம்மா என்னிடம் சொல்லும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் நான் எம்ஜிஆர்ரை பார்த்து ஒரு பக்தனாக வளர்ந்தேன். அப்படிப்பட்ட என்னுடைய கடவுள் என் படத்தை பார்த்து ரசிக்கிறார் என்கிற பெருமை எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது என்று கேப்டன் ஒரு பேட்டியில் கூறுகிறார்.