வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எம்ஜிஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. காலில் விழுந்து கதறிய அசோகன்

Actor MGR and Ashokan: எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் வெளிவந்த படங்களை தற்போது வரை மறக்க முடியாமல் மறுபடியும் இந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டோமா என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் அப்படத்தில் இருந்த தனித்துவமான நடிப்பும், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியான வசனங்களும் மிகப்பெரிய முக்கியத்துவமாக இருந்தது.

அந்த வகையில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலகட்டத்தில் பல நடிகர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள். அத்துடன் இவர்களுக்கு வில்லனாக நடித்தவர்களும் ஹீரோ ரேஞ்சுக்கு மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அப்படி இவர்களுடன் பல படங்களில் நடித்தவர் தான் நடிகர் அசோகன். இவர் கதாநாயகன், சப்போர்ட்டிங் கேரக்டர் மற்றும் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

Also read: எம்ஜிஆர் இயக்கிய முதல் கலர் படம்.. 800 மடங்கு லாபத்தை பார்த்து படைத்த சரித்திரம்

முக்கியமாக எம்ஜிஆர் நடித்த படங்களில் கிட்டத்தட்ட 59 படங்கள் வரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இவர்களுடைய நட்பு மிகவும் வலுவாகிவிட்டது. மேலும் அசோகனின் காதல் திருமணத்தை பல போராட்டங்களை சந்தித்து முன்னாடி நின்னு நடத்தியவர் எம்ஜிஆர். அப்படிப்பட்ட இவர்கள் நட்பு ரீதியாக பழகிய போதும், எம்ஜிஆர், அசோகன் அவர்களை “வாங்க முதலாளி, வணக்கம்” என்றுதான் மரியாதையுடன் அழைப்பாராம்.

அதாவது பொதுவாக எம்ஜிஆரிடம் ஒரு பழக்கம், தயாரிப்பாளர்களை மரியாதை உடன் முதலாளி என்று கூப்பிடுவது தான். அந்த வகையில் ஏவி மெய்யப்ப செட்டியார், நாகி ரெட்டியார், எம் எஸ் வாசன், சின்னப்ப தேவர் இவர்களை அப்படித்தான் கூப்பிடுவார். இதை மாதிரி நடிகர் அசோகரையும் அப்படித்தான் வாங்க முதலாளி என்று கூப்பிட்டு இருக்கிறார். அதற்கு காரணம் கொஞ்ச படங்களில் நடித்த பிறகு அசோகன் தயாரிப்பாளராக மாறிவிட்டார்.

Also read: எம்ஜிஆர் இடத்துக்கு ஆசைப்படும் விஜய்.. டெப்பாசிட் கூட கிடைக்காத படி அக்கப்போர் பண்ணும் அல்லக்கைகள்

இதனால் எம்ஜிஆர் இவரையும் மரியாதை கொடுத்து பேச ஆரம்பித்து விட்டார். ஆனால் நடிகர் அசோகன் ரொம்பவே பதற்றத்தில் எம்ஜிஆரின் காலில் விழுந்து என்னை தயவு செய்து அப்படி கூப்பிடாதீர்கள் என்று கெஞ்சி இருக்கிறார். அத்துடன் இனிமேல் அப்படி கூப்பிட மாட்டேன் என்று சொன்னால் தான் உங்க காலை விடுவேன் என்று மன்றாடி இருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் அவரைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்து “அட மண்டு” நான் சம்பளம் வாங்கி படத்தில் நடிப்பவன்.

நீ எனக்கு சம்பளம் கொடுப்பவன் உன்னை முதலாளி என கூப்பிட்டால் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். நான் எவ்வளவு புகழ் பெற்றிருந்தாலும் உனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து ஆக வேண்டும். உனக்கு மட்டும் இல்லை என் படத்திற்கு தயாரிப்பாளர்களாக இருக்கும் அனைவருக்கும் நான் இப்படித்தான் மரியாதை செலுத்துவேன் என்று சொல்லி இருக்கிறார். அப்படி எம்ஜிஆர் நடித்த படத்தை அசோகன் தயாரித்த படம் தான் ” நேற்று இன்று நாளை”.

Also read: சாப்பாட்டை பிடுங்கி விட்டு விரட்டி அடிக்கப்பட்ட எம்ஜிஆர்.. முதலமைச்சர் ஆனதும் பதிலடி கொடுத்த சம்பவம்

Trending News