கோலிவுட்டில் சில முகங்கள் எல்லா படங்களிலும் இருப்பது போல தெரியும். காமெடி சீன்ஸ், குணச்சித்திர கதாபாத்திரம் ஏன் ஒரு சீனில் கூட வந்து விடுவார்கள். இதனாலேயே என்னவோ அவர்கள் முகங்கள் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. மேலும் இவர்கள் எந்த கதாபாத்திரம் குடுத்தாலும் சிறப்பாக செய்திடுவார்கள்.
மனோபாலா: மனோபாலா நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் ஆவார். இவர் ரஜினி, ராதிகா நடித்த ஊர்காவலன் படத்தை இயக்கி இருக்கிறார். சூர்யாவின் பிதாமகன் மற்றும் கலகலப்பு திரைப்படத்தில் இவர் சந்தானத்துடன் வரும் காமெடி சீன்கள் எப்போதுமே எவர் கிரீன் தான்.
Also Read: தற்கொலைக்கு தூண்டும் மனோபாலா.. மறைமுகமாக திட்டித்தீர்த்த பிரபலம்
இளவரசு: இளவரசு முதலில் ஒளிப்பதிவாளராக வந்தவர். பாரதிராஜாவின் வேதம் புதிது திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். லாரன்ஸின் பாண்டி திரைப்படம் மற்றும் முத்துக்கு முத்தாக திரைப்படத்தில் இவர் நடித்த செண்டிமெண்ட் காட்சிகள் எப்போது பார்த்தாலும் கண்ணீர் வரவழைக்கும்.
தேவதர்ஷினி : தேவதர்ஷினி முதலில் சின்னத்திரை தொடர்களில் நடித்து கொண்டிருந்தவர். காக்க காக்க திரைப்படம் தான் இவர் முதலில் வெள்ளித்திரையில் நடித்தது. தேவதர்ஷினி என்றாலே கலகலப்பான கேரக்டர்கள் தான் பண்ணுவார். காஞ்சனா படத்தில் இவருடைய காமெடி சீன்கள் தீ பெஸ்ட் என்று சொல்லலாம்.
Also Read: நான்லாம் இப்போ ஹீரோயின் ரேஞ்சுங்க.. தேவதர்ஷினி நடிக்க மறுக்கும் அந்த ரோல்
எம்எஸ் பாஸ்கர் : எம்எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது இவர் பின்னணி குரலும் கொடுப்பவர். இவருடைய நடிப்பு மிகவும் முதிர்ச்சி பெற்ற நடிப்பு. மொழி திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ப்ரொபஸராக நடித்தது இவருடைய பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்று சொல்லலாம்.
எம்எஸ் பாஸ்கர் குணச்சித்திர நடிகர் மட்டுமில்லாமல் சிறந்த நகைச்சுவை நடிகரும் கூட. இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொலைக்காட்சி தொடரில் நடித்த பட்டாபி கேரக்டர் யாராலும் மறக்க முடியாது.
Also Read: இளமையில் ஜெயிக்க முடியாமல் போன எம் எஸ் பாஸ்கர்.. பாகுபலிக்கு முன்னரே செய்த சாதனை