திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதல் முதலாக ஆஞ்சநேயரை மறந்த ஆக்சன் கிங்.. அர்ஜுன் வீட்டு கல்யாணத்தின் இடமும், தேதியும், நட்சத்திரங்களும்

Arjun gave up everything for his daughter’s Marriage: ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜுன் தற்போது விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லின் கேரக்டரில் நடித்து வருகிறார். விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு, அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணைந்திருக்கிறார். இவர்களுடைய காம்போ மங்காத்தா படத்தில் ஏற்கனவே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் விடாமுயற்சி படத்திலும் அஜித் மற்றும் அர்ஜுனின் காம்போ அட்டகாசமாக அமையப்போகிறது. இந்த சூழலில் கடந்த வருடம் இவருடைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இவர்களுடைய திருமணம் வருகிற ஜூன் 10ஆம் தேதி நடைபெறப் போகிறது.

அந்த வகையில் இவர்களுடைய திருமணத்தை கிருகம்பாகத்தில் உள்ள அர்ஜுன் வீட்டில் இருக்கும் கார்டனில் மிகப்பெரிய அளவில் செட்டு போட்டு நடத்தப் போகிறார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வருவதாக பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது.

Also read: அர்ஜுன் இயக்கிய லாபமும் நஷ்டமும் அடைந்த படங்கள்.. 60 வயதிலும் லியோ சித்தப்பா செய்யும் அக்கப்போரு!

ஆனால் அர்ஜுனை பொறுத்தவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை ஆஞ்சநேயர் முன்னாடி தான் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர். அந்த அளவிற்கு தீவிர பக்தனாக இருப்பவர். அப்படி இருக்கும் பொழுது மகளின் கல்யாணத்தையும் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தான் நடத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தற்போது மகளின் ஆசைக்காக மிக பிரம்மாண்ட அளவில் வீட்டில் வைத்து அதற்கான செட்டுகளை அமைத்து கல்யாணத்தை பண்ணி விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார். ஆகையால் விரைவில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடைபெறப் போகிறது. மேலும் உமாபதியும் சினிமாவில் இவருக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கான இயக்குனர்களை தேடி போகிறாராம்.

Also read: 5 ஹீரோக்களின் வாழ்க்கையை தூக்கி நிறுத்திய லோகேஷ்.. அர்ஜுன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அதிக வாய்ப்பு

Trending News