திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

உயிர் போகும் நிலைமையில் உள்ள என்ன காப்பாத்துங்க கேப்டன்.. கதறும் நடிகர்

Captain Vijayakanth: கோலிவுட்டில் ஆக்சன் ஹீரோ என்றால் முதலில் நினைவுக்கு வருவது கேப்டன் விஜயகாந்த் முகம் தான். இவருடைய படத்தில் கேப்டன் மட்டுமல்ல அவருடன் இணையும் வில்லன்களும் பேமஸ் ஆகி விடுவார்கள். அதிலும் இவருடைய 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடித்த மன்சூர் அலிகானை பறந்து பறந்து கழுதை உதை விடுவார்.

இந்த படத்திற்குப் பிறகு மன்சூர் அலிகான் ரேஞ்ச் எங்கேயோ போனது. சில வருடம் சினிமாவில் இருந்து விலகி இருந்த மன்சூர் அலிகான், இப்போது மறுபடியும் தளபதி விஜய்யின் லியோ படத்தில் என்ட்ரி ஆனார். ஆனால் இவருடைய வாயில சனி புகுந்து ஆட்டி படைக்கிறது. திரிஷாவுடன் பலான காட்சிகள் இருக்கும் என நினைத்தேன் என்று கூறி, பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

இதற்கு அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. அதேசமயம் கேப்டனை தனது சொந்த அண்ணனாகவே நினைத்த மன்சூர் அலிகான், இப்போது மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்த் நன்கு உடல்நலம் தேறி மீண்டு வர வேண்டும் என உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also read: போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து த்ரிஷாவுக்கு வந்த அறிக்கை.. விடாமல் தொடரும் பிரச்சினை

கேப்டனிடம் கதறிய மன்சூர் அலிகான்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சளி பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த்துக்கு தற்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பதால், அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில், ‘அண்ணே! தங்களுக்கு ஏன் இந்த சோதனை?. உங்களுடைய பாசமிகு தம்பி அழுகிறேன் நன்றாகி வாருங்கள். ஆபத்தில் இருக்கும் தம்பிக்கு உதவ வாருங்கள். சினிமாவில் எதிர் நாயகன்களை கழுதை உதை உதைப்பீர்களே! இனி எப்ப வந்து உதைப்பீர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தூண் போல் இருக்கும் கால்கள் மெலிந்ததேனோ! படத்தில் நாயகிகளை பின்னால் சுற்ற வைத்து, சில்மிஷம் செய்ய வைத்து, ஆடி ஓடி உழைப்பை பிழிய வைத்தவரே! உங்களுடைய இந்த நிலைமையை பார்த்தால் சாப்பிடுகிற சோறு கூட உடம்பில் ஒட்ட மாட்டேங்குது. நீங்கள் நூறாண்டு நீடூடி வாழ வேண்டும் என்று கண்ணீருடன் கதறி இருக்கிறார்.

Also read: கொடூர வில்லனாக நடித்து காமெடி பீஸ்ஸாக மாறிய 5 நடிகர்கள்.. மொட்ட ராஜேந்திரனை ஓட ஓட விரட்டிய விஜய்

- Advertisement -

Trending News