ஏட்டிக்கு போட்டியாக நிற்கும் தனுஷ், ஐஸ்வர்யா.. கரும்பு மிஷினில் மாட்டிய கதையான நடிகரின் நிலை

நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். அதை தொடர்ந்து அவர்களின் குடும்ப விஷயங்கள் பற்றியும் பிரிவுக்கான காரணங்கள் பற்றியும் ஏராளமான செய்திகள் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது.

ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் அது பற்றி கவலைப்படாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர். அந்த வகையில் தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோன்று ஐஸ்வர்யாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படி இருவரும் பிசியாக இருந்தாலும் மறைமுகமாக சில போட்டிகளும் அவர்களுக்குள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம்.

Also read: டைட்டில் பாடல் வைக்கப்பட்ட முதல் படம்.. 45 வருடங்கள் கழித்து ரீமிக்ஸ் செய்த அனிருத்

அதாவது தனுஷ் அடுத்ததாக ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போவது அனைவருக்கும் தெரியும். இது கூட அவர் ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக தான் செய்கிறார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் அவர் இயக்கும் திரைப்படத்தின் கதையை முதலில் விஷ்ணு விஷாலிடம் தான் கூறினாராம். அந்த கதை பிடித்துப் போனதால் அவரும் தனுசுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சம்மதித்திருக்கிறார்.

ஆனால் தயாரிப்பாளர் கிடைப்பதில் சிறு பிரச்சனை ஏற்படவே படம் ஆரம்பிப்பதற்கும் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த கேப்பில் தான் ஐஸ்வர்யா தன்னுடைய லால் சலாம் பட கதையை விஷ்ணு விஷாலிடம் கூறியிருக்கிறார். அந்த கேரக்டர் பிடித்துப் போனதால் அவர் தற்போது அந்த படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது.

Also read: அந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்ட நடிகர்.. நிலைத்து நின்ற ரஜினிகாந்த்

என்னவென்றால் தனுஷும் தன் படத்திற்கு உடனே தேதிகளை ஒதுக்கி கொடுக்கும் படி விஷ்ணு விஷாலிடம் கேட்டிருக்கிறார். அது முடியாமல் போனதால் தற்போது அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டார்களாம். இதுதான் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தனுஷின் படம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே இப்படி ஒரு விஷயம் அரங்கேறி இருக்கிறது.

இதிலிருந்தே கணவன், மனைவி இருவரும் ஏட்டிக்கு போட்டியாக நிற்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இவர்களுடைய சண்டையில் பாவம் விஷ்ணு விஷால் தான் கரும்பு மிஷினில் மாட்டிய நிலையில் இருக்கிறார். மேலும் இந்த விவகாரம் பற்றி தான் அவர் மறைமுகமாக தன் சோசியல் மீடியாவில் ட்வீட் போட்டு பின்னர் நீக்கிவிட்டாரோ என்ற சந்தேகமும் இப்போது எழுந்துள்ளது.

Also read: மாமனாரை ஓரங்கட்டிய மருமகன்.. விஜய், அஜித் செய்யாததை செய்து ரஜினியை தலை நிமிரச் செய்த தனுஷ்