வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ராதிகாவுடன் நடித்து விட்டு தங்கை நிரோஷாவிற்கு தீவிர ரசிகரான நடிகர்.. சூப்பர்ஸ்டாரால் வளர்ந்த பகை.!

தமிழ் சினிமாவின் 80 காலக்கட்டத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ராதிகா, அவர்களின் வளர்ச்சிக்கும் உதவினார். ராதிகாவின் தந்தை எம்.ஆர். ராதா பழம்பெரும் நடிகர் என்பதால் இவரது அண்ணன் ராதாரவி, தங்கை நிரோஷா உள்ளிட்டோரும் படங்களில் நடித்து வந்தனர்.

இதில் ராதிகாவின் தங்கை நிரோஷா அக்னி நட்சத்திரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நிரோஷா படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் ராதிகாவை விட இவருக்கு அதிகம் ரசிகர்கள் 80 காலகட்டங்களில் இருந்தார்கள்.

Also Read : 18 படங்கள் ஒரே ஹீரோவுடன் நடித்த ராதிகா.. பல ஹிட் கொடுத்தும் ஒன்றுமில்லாமல் போன ரஜினியின் நண்பர்

அக்கா தங்கைக்கு இடையே பல போட்டிகளும் அன்றைய காலக்கட்டத்தில் இருந்ததாக பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது. இந்நிலையில் நடிகை ராதிகா ஹிந்தியில் சில படங்களில் 80 காலக்கட்டங்களில் நடித்து வந்தார். அதில் முக்கியமாக 1990 ஆம் ஆண்டு வெளியான ஆஜ் கா அர்ஜுன் என்ற படத்தில் அமிதாப் பச்சனுடன் ராதிகா நடித்திருப்பார்.

இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ராதிகா நான் உங்களது மிகப்பெரிய ரசிகை என அமிதாப் பச்சனிடம் தெரிவித்தாராம். உடனே அமிதாப் பச்சனும் நன்றி கூறியது மட்டுமில்லாமல், உங்கள் தங்கை தானே நிரோஷா என்று கேள்விக் கேட்டுள்ளார்.அதற்கு ஆமாம் என்று பதிலளித்த ராதிகாவிடம், நான் உங்கள் தங்கையின் மிகப்பெரிய ரசிகர் அவரது திரைப்படங்களை பலமுறை பார்த்துள்ளேன் என ராதிகாவிடம் அமிதாப் பச்சன் தெரிவித்தாராம்.

Also Read : மதிக்காத ராதிகா, கெஞ்சிய கமலஹாசன்.. பின் ஆண்டவர் வச்ச கச்சேரி!

மேலும் ராதிகாவை அவரது கேரவனுக்கு அழைத்து சென்று அங்குள்ள பல இடங்களில் நிரோஷாவின் புகைப்படத்தை ஒட்டி வைத்து ரசித்து வந்ததை காண்பித்துள்ளார் அமிதாப் பச்சன் . மேலும் நிரோஷாவை நான் சந்திக்க வேண்டும் என ராதிகாவிடம் கோரிக்கை விடுத்தாராம் . இதையெல்லாம் பார்த்து நிரோஷா மேல் செம காண்டானாராம் ராதிகா. பின்னர் நிரோஷாவை அழைக்க சென்ற போது அவருக்கு கால் உடைந்து கட்டுப்போட்டு இருந்ததாம்.

இதன் காரணமாக நொண்டி நொண்டி நடந்து வந்தாராம் நிரோஷா. இதைப்பார்த்த ராதிகா சற்று பெருமூச்சு விட்டு நிரோஷாவை அமிதாப் பச்சன் முன்னாள் அழைத்து சென்றாராம். நிரோஷா நொண்டி நொண்டி வருவதை பார்த்த அமிதாப் பச்சான், அவரை நாற்காலியில் அமர வைத்து, உங்கள் அக்கா என் தீவிர ரசிகை ஆனால் நான் உங்களின் ரசிகையென நிரோஷாவிடம் சொன்னாராம் அமிதாப் பச்சன். இது ராதிகாவை மேலும் கடுப்படைய வைத்ததாக பேட்டியில் பகிர்ந்துகொண்டார் ராதிகா.

Also Read : சரத்குமார் முதல் மனைவி விவாகரத்து, ராதிகா காரணம் இல்ல.. இந்த நடிகை தானாம்

Trending News