சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கமலை பார்த்து பயந்த அஞ்சாதே நடிகர்.. வெறுத்துப்போன லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது.

விக்ரம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் கமல் எப்போதும் போல பட்டையை கிளப்பி உள்ளாராம். அதுமட்டுமல்லாமல் கமல் ரசிகர்களுக்கு விக்ரம்படம் ஒரு நல்ல விருந்தாக அமையும் என லோகேஷ் கனகராஜ் இப்படத்தைப் பற்றி கூறியுள்ளார்.

இந்நிலையில் படத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை நரேன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். கமலை பார்த்துதான் நான் சினிமாவில் நடிக்கணும்னு ஆசைபட்டேன் என அதில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கமல் சாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு பாக்கியம் என கூறியுள்ளார்.

விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் கமலஹாசன் நரேனை கேள்வி கேட்ககும் போது, நரேன் அதற்கு பதிலளிக்க அவரை பார்க்க வேண்டுமாம். அந்தச் சமயத்தில் கமலைப் பார்த்து வசனத்தை சொல்லப்போகும் போது நரேன் பயந்துவிட்டாராம். அதுவும் கமலை பார்த்தவுடன் நரேனுக்கு வார்த்தையே வரவில்லையாம்.

அந்த காட்சியை மட்டுமே லோகேஷ் கனகராஜ் பலமுறை எடுத்து வெறுத்துப் போனாராம். அந்தக் காட்சி முடிந்த பின்னர் லோகேஷ் நரேனிடம் நீங்கள் பேசியது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ரொம்ப பயந்து பேசுகிறீர்கள் என்று கூறினாராம். அதற்கு நரேன் நான் நடிக்கவில்லை, கமலை பார்த்து உண்மையில் பயந்துவிட்டேன் என்று கூறினாராம்.

மேலும், விக்ரம் திரைப்படம் கமலஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என நரேன் தெரிவித்துள்ளார். விக்ரம் படம் ஜூன் 3 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கமல் ரசிகர்கள் விக்ரம் படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Trending News