வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

Cook With Comali : CWC 5 க்காக சீரியலில் இருந்து விலகும் நடிகர்.. அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருவார்கள். அந்த வகையில் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வெங்கடேஷ் பட் தனியாக சன் டிவியில் டாப் குக் டுப் குக் என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்.

இதனால் இந்த இரு நிகழ்ச்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதுவும் சன் டிவி வைகைப்புயல் வடிவேலுவை இறக்கி இருக்கிறது. இதனால் இப்போது விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே அனல் பறக்கும் போட்டி நடைபெறுகிறது.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் டிடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சுஜிதா, தொகுப்பாளினி பிரியங்கா, சின்னத்திரை நடிகர் அக்ஷய் கமல், யூடிபர்‌ இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், தேவா சின்னத்திரை நடிகர் வசந்த் போன்ற பிரபலங்கள் பங்கு பெறுகின்றனர்.

சீரியலில் இருந்து விலகும் அக்ஷய் கமல்

இதில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் தான் அக்ஷய் கமல். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது அதே தொலைக்காட்சியில் இந்திரா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற்ற நிலையில் இந்த தொடரில் இருந்து விலக உள்ளார். அவருக்கு பதிலாக சரியான கதாநாயகன் கிடைக்காததால் தற்போது வரை அக்ஷய் கமல் நடித்து வருகிறார். அதன் பிறகு அவருக்கு பதிலாக வேறு நடிகரை தேர்வு செய்த பின் இவர் விலக உள்ளார்.

ஆனால் அக்ஷய் கமலின் இந்த முடிவு அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று மாதங்கள் மட்டுமே நடக்கக் கூடியது. அதுவும் ஒவ்வொரு வாரம் போட்டியாளர்கள் விலகும் நிலையில் இதை நம்பி சீரியலை கைவிடுவதா என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

Trending News