வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அங்க இருந்து வந்துட்டு இங்க நீ சூப்பர் ஸ்டாரா? எதார்த்தமாக பேசிய ரஜினியிடம் வன்மத்தை காட்டும் நடிகர்

திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், சிலர் அவரை வெறுக்கவும் செய்கின்றனர். அதிலும் சினிமா துறைக்குள்ளே இருக்கும் சில நடிகர்கள் பொறாமையின் காரணமாக சில வேண்டாத செயல்களிலும் ஈடுபடுவதுண்டு. அப்படி ஒரு நடிகர் பல வருடங்களாக ரஜினியின் மீதுள்ள பொறாமையால் பல அவதூறுகளை பேசி வருகிறார்.

அவர் வேறு யாரும் அல்ல நடிகர் சத்யராஜ் தான். இவர் ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியுடன் இணைந்து தம்பிக்கு எந்த ஊரு, மிஸ்டர் பாரத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒருமுறை தம்பிக்கு எந்த ஊரு பட ஷூட்டிங்கின் போது ஹீரோயின் மாதவி, ரஜினியிடம் சத்யராஜை காட்டி அவர் யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி மிகவும் விளையாட்டாக அவர் ஒரு அமெரிக்க ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் ப்ரொபசர் என்று கூறி இருக்கிறார்.

உடனே மாதவி சத்யராஜிடம் சென்று அவரைப் பற்றி சில கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார். அப்போது அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத சத்யராஜ் திருதிருவன முழித்திருக்கிறார். பிறகு நடிகை சுலக்சனா அங்கு வந்து ரஜினி வழக்கம்போல் விளையாட்டாக பேசியதை கூறி இருக்கிறார். இதைக் கேட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்திருக்கிறார்கள்.

Also read: என் முதல் படத்தைப் பார்த்துட்டு பாரதிராஜா கூறிய விமர்சனம்.. பாட்ஷா பட இயக்குனர் பகிர்ந்து சுவாரஸ்யம்

அதை அவமானமாக நினைத்துக் கொண்ட சத்யராஜ் இரண்டு நாட்கள் வரை படப்பிடிப்புக்கு வரவில்லையாம். அதன் பிறகு நடிக்க வந்த அவர் யாரிடமும் சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருந்திருக்கிறார். இதுதான் அவர் ரஜினி மீது கோபப்பட முதல் காரணமாக இருந்திருக்கிறது. அதை தொடர்ந்து மிஸ்டர் பாரத் படத்தின் போது சத்யராஜ் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை வெட்டி இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் ரஜினியும் சத்யராஜ் நன்றாக நடித்திருக்கிறார், என்னை விட அவர் தான் ஹீரோ போல் இருக்கிறார் என்று பெருமிதமாக கூறியிருக்கிறார். ஆனால் அதுவும் குத்தலாக பேசியது போல் சத்யராஜுக்கு தோன்றியிருக்கிறது. அதற்கேற்றார் போல் அவருடைய காட்சிகளும் வெட்டப்பட்டு விட்டதால் அந்த கோபம் பல மடங்கு பெருகி இருக்கிறது. அதன் பிறகு அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் ரஜினியுடன் இணைவதை தவிர்க்க ஆரம்பித்தார்.

Also read: நிற்க கூட நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கும் சத்யராஜ்.. ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இதுதான்

ஒரு கட்டத்தில் அவர் முன்னணி ஹீரோவாக மாறிய பின் ரஜினி படத்தில் வில்லன் வாய்ப்பு அவருக்கு வந்தது. ஆனால் அப்போதும் கூட அவர் ரஜினி குறித்து கடுமையாக பேசினார். அது மட்டுமல்லாமல் காவிரி பிரச்சனைக்காக நடிகர்கள் போராட்டம், உண்ணாவிரதம் செய்த போது கூட சத்யராஜ், ரஜினி பற்றி படுமோசமாக விமர்சித்து இருந்தார். அவ்வளவு பேர் கூடியிருக்கும் ஒரு மேடையில் தான் தமிழன் என்றும் எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கு கைத்தட்டல் பெறுகிறார்கள் என்றும் சம்பந்தமில்லாமல் பேசினார்.

இத்தனைக்கும் அந்த மேடையில் ரஜினியும் அமர்ந்திருக்கிறார். ஆனால் அவர் சத்யராஜின் இந்த குத்தல் பேச்சு குறித்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். அவருடைய பேச்சைக் கேட்ட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் தெரியும் அவர் ரஜினியை தான் குத்தி காட்டி பேசுகிறார் என்று. இது போன்று அவர் கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ரஜினி பற்றி கூறுவதையே வழக்கமாக வைத்திருந்தார். இதற்கு முக்கிய காரணம் வேறு மாநிலத்திலிருந்து வந்த ரஜினி இந்து சூப்பர் ஸ்டாராக மாறிய பொறாமை தான். ஆனால் ரஜினி நான் குணத்திலும் சூப்பர் ஸ்டார் தான் என்பதற்கேற்ப சத்யராஜின் பேச்சை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.

Also read: சினிமாவில் விக் வைத்து நடிக்கும் 5 நடிகர்கள்.. வெளியில் கெத்தாக செல்லும் சூப்பர் ஸ்டார்

Trending News