திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கட்டுப்பாட்டை மீறிய மனைவி.. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த நடிகர்

Gossip: தற்போது ஜெயமான நடிகர் வீட்டு பிரச்சனை தான் கொழுந்து விட்டு எரிகிறது. திடீரென நடிகர் தன் மனைவியை பிரிய என்ன காரணம் என பலருக்கும் குழப்பம்தான். ஆனால் இது பல நாட்களாகவே புகைந்து வந்த விஷயம்தான்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகருக்கு மனைவி மீது கொள்ளை பிரியம். இருவரும் அன்னோன்யமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் போகப் போக மனைவியின் போக்கு மாறி இருக்கிறது. கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அவர் எப்போதும் பார்ட்டி, பப் என என்ஜாய் செய்வாராம்.

அதிலும் திரை துறையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் முதல் பிரபலங்களின் மனைவிகள் வரை அனைவருடனும் இவருக்கு நட்பு இருக்கிறது.. அவர்களுடன் சேர்ந்து ஜாலி பண்ணும் மனைவி சில சமயங்களில் நடிகரை கடுப்பேற்றி இருக்கிறார்.

மனைவியை பிரிந்த ஹீரோ

நடிகர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் நிலையில் மனைவியின் அதிகார தோரணை அவருக்கு பிடிக்கவில்லை. அதை போல் மாமியாரும் நடிகரை வீட்டோடு மாப்பிள்ளையாக கண்ட்ரோலில் வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதையெல்லாம் காதலுக்காக பொறுத்து வந்த நடிகர் தற்போது பொங்கி எழுந்திருக்கிறார். அந்த அளவுக்கு மனைவி தரப்பிலிருந்து அவருக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் மனைவி நடிகரை சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்வாராம்.

அதுதான் இப்போது இந்த அளவுக்கு வந்திருக்கிறது. இதில் நடிகரின் மனைவியை தான் பலரும் குற்றம் சொல்கின்றனர். நடிகர் அப்பாவி அவரின் மனைவிதான் பிரச்சனைக்கு காரணம் என பல யூகங்கள் இப்போது மீடியாவை சுற்றி வருகிறது.

நடிகரை ஓவர் டார்ச்சர் செய்த மனைவி

Trending News