ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பம்பாய் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்.. வேறு வழியில்லாமல் நடித்த அரவிந்த்சாமி

அரவிந்த் சாமி நடிப்பில் 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கி தயாரித்த பம்பாய் திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் வெளிவந்தபோது அரவிந்த்சாமி ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டையும் பெற்றார்.

மேலும் பம்பாய் படத்தில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களின் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. அதனால் சில சர்ச்சைகளும் இப்படத்திற்கு கிளம்பின. இருந்தாலும் படம் வெளியான பிறகு பெருவாரியான ரசிகர்களுக்கு வரவேற்பு பெற்ற காரணத்தினால், பல சர்ச்சைகளுக்கு இடையே பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்த படத்தின் கதை மட்டுமல்லாமல், இதில் ஏஆர் ரகுமான் இசையமைத்த எல்லாம் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

இப்படத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்த சேகர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால் அப்போது விக்ரம் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினாலும் அந்தப் படத்தில் பிஸியாக இருந்ததால் பம்பாய் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகுதான் வேறு வழி இல்லாமல் மணிரத்தினம் பம்பாய் படத்தில் அரவிந்த்சாமி நடிக்க வைத்துள்ளார்

அரவிந்த்சாமி முதல்முதலாக நடித்த ரோஜா படத்திற்கு பிறகு ரசிகைகளின் கனவுக் கண்ணனாக அரவிந்த்சாமி, பம்பாய் படம் அவருக்கு கிடைத்த பொக்கிஷமே என்று சொல்லலாம். அரவிந்த்சாமியின் முதல் படமான ரோஜா படத்தையும் மணிரத்னம் தான் இயக்கினார்.

இந்த படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்த பிறகும், ரோஜா படத்திற்கு கிடைத்த வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு மணிரத்தினம் விக்ரம் தவறவிட்ட வாய்ப்பை அரவிந்த்சாமி கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் அவருடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு அரவிந்த்சாமியும் பம்பாய் படத்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி படத்தை வேற லெவலுக்கு ஹிட்டடிக்க வைத்தார்.

வெவ்வேறு சமயத்தை சேர்ந்த கதாநாயகன்-கதாநாயகி இணையும் இந்தப் படத்தின் கதை மற்றும் கதைகளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் சேகர் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி மற்றும் ஷகிலா பானு கதாபாத்திரத்தில் நடித்த மனிஷா கொய்ராலா இருவரின் ரொமான்ஸ் காதல் தத்ரூபமாக இந்த படத்தில் காட்டப்பட்டு ரசிகர்களை வசியம் செய்தது.

Trending News