Vijaykanth: நடிகராகவும் சரி, அரசியல் தலைவராகவும் சரி இதுவரை எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் ஆளாகாத ஒரே மனிதர் கேப்டன் விஜயகாந்த் தான். அந்த வகையில் இவரை ஒருவர் கூட தவறாக பேசியோ அல்லது வெறுத்தோ யாருமே சொன்னதே கிடையாது. அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் சொக்கத்தங்கமாக வாழ்ந்திருக்கிறார்.
அத்துடன் சினிமாவில் இருக்கும் பல கலைஞர்களையும் மற்றும் இளைஞர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் சின்ன சின்ன ஆர்டிஸ்ட்களுக்கும் மரியாதை கொடுத்து, பல கலைஞர்களுக்கு கை கொடுத்து தூக்கி நிறுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு சினிமா கேரியரில் கிட்டத்தட்ட 7 படங்களை இயக்கி மிகப் பெரிய சப்போர்ட் செய்திருக்கிறார் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன்.
80களில் பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் விஜயகாந்தை வைத்து வைதேகி காத்திருந்தால் என்கிற படத்தை எடுத்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகி 100 நாட்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு விஜயகாந்த்க்கு பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அடுத்ததாக அம்மன் கோவில் கிழக்காலே படத்தையும் விஜயகாந்தை நடிகராக நடிக்க வைத்து சிறந்த நடிகர் என்கிற விருதையும் பெற்று கொடுத்திருக்கிறது.
Also read: செல்லப் பிள்ளையாய் இருந்த விஜயகாந்த் கலைஞரை எதிர்த்த காரணம்.. சிஸ்டம் சரியில்ல என ஒதுங்கிய ரஜினி
இதனைத் தொடர்ந்து தழுவாத கைகள், என்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான் போன்ற ஐந்து படங்கள் கிட்டத்தட்ட சூப்பர் ஹிட் படங்களாக மக்கள் மத்தியில் வெற்றி பெற்று விஜயகாந்தின் சினிமா கேரியரில் வளர்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. அதன் பின் காந்தி பிறந்த மண், காலையும் நீயே மாலையும் நீயே போன்ற படத்தை எடுத்து விஜயகாந்தை நடிக்க வைத்தார்.
ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் போய் சேரவில்லை. இருந்தாலும் விஜயகாந்தின் முக்கிய படங்களில் இதுவும் பெயர் வாங்கி இருக்கிறது. இப்படி விஜயகாந்தின் கேரக்டருக்கும், நடிப்புக்கும் ஏற்ற மாதிரி இயக்குனர் ஆர் சுந்தரராஜன் தொடர்ந்து ஏழு படங்களை இவரை வைத்து இயக்கி இருக்கிறார். அந்த சமயத்தில் இந்த ஒரு விஷயம் விஜயகாந்துக்கு மிகப்பெரிய உதவியாகவும் கூட இருந்திருக்கிறது.
Also read: விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்.. ஆவேசத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய விசுவாசிகள்