Gossip: அண்மை காலமாக நடிகைகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது நல்ல விஷயம் தான். அக்கட தேசத்து டாப் ஹீரோக்கள் கூட இது போன்ற விவகாரத்தில் கருத்து கூறுகின்றனர்.
ஆனால் கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகர்கள் யாரும் பெரிய அளவில் இதற்கு குரல் கொடுப்பதில்லை. அப்படித்தான் சமீபத்தில் எவர்கிரீன் நடிகையை முரட்டு வில்லன் ஏடாகூடமாக பேசி இருந்தார். நடிகையும் இதனால் கடுப்பாகி அவருக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து ஒவ்வொருவரும் நடிகைக்கு சப்போர்ட்டாக களம் இறங்கினார்கள். ஆனால் அந்த மாஸ் ஹீரோ மட்டும் ஆதரவு தெரிவிக்காதது நடிகைக்கு ரொம்பவே வருத்தமாம். உண்மையில் அவருடைய வாய்ஸ் இதில் இருக்கும் என்று மீடியாக்களே எதிர்பார்த்தது.
Also read: வருட கணக்கில் தொகுப்பாளினியுடன் ரகசிய உறவில் இருந்த டாப் ஹீரோ.. கள்ளக்காதலால் நடந்த விவாகரத்து
ஆனால் நடிகரின் அமைதி நடிகையின் கோபத்தை அதிகப்படுத்தி விட்டதாம். இது அந்த ஹீரோவின் காதுக்கு சென்ற நிலையில் உடனே நடிகைக்கு போன் போட்டிருக்கிறார். அதில் அவர் நீ எவ்வளவோ பிரச்சனை எல்லாம் பார்த்திருப்ப இதெல்லாம் தூசி மாதிரி என்று உச்சி குளிரும் படியாக நடிகையிடம் பேசி இருக்கிறார்.
அதன் பிறகு தான் நடிகை ஓரளவுக்கு சமாதானம் ஆனாராம். ஆனால் உண்மையில் நடிகைக்கு ஆதரவு கொடுத்தால் எங்கே பொண்டாட்டியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் தான் நடிகருக்கு இருந்திருக்கிறது. அதனாலயே இந்த விவகாரத்தை தனியாக போன் போட்டு டீல் செய்து முடித்து இருக்கிறார்.
Also read: நடிகையின் அழகில் தடுமாறி போன ஹீரோ.. கண்ட இடத்தில் கை பட்டதால் விழுந்த அறை