புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நம்பர் நடிகை ரூட் தான் சரி.. அப்பா பேச்சை தட்ட முடியாமல் தவிக்கும் நடிகர்

Gossip: பிரபல நடிகர் வீட்டு சமாச்சாரம் தான் இப்போது தீயாக பரவி வருகிறது. திறமையான நடிகர் என பெயர் எடுத்த இந்த நடிகர் சமீபத்தில் தன் மகனுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.

மருமகள் ஒன்றும் லேசு பட்டவர் கிடையாது. பெரிய இடத்து பெண்ணான இவர் எந்த பந்தாவும் இல்லாமல் நடிகரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டதாம். அதாவது திருமணம் முடிந்தால் அடுத்து என்ன குழந்தை தானே.

அப்பா பேச்சை தட்ட முடியாமல் தவிக்கும் நடிகர்

அதற்காக மூத்த நடிகர் பெரிதும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் மகனும் மருமகளும் இன்னும் எந்த நல்ல வார்த்தையும் சொல்லவில்லை.

இதற்காக மருத்துவரை கூட அவர்கள் நாடிவிட்டார்களாம். ஆனால் ரிசல்ட் தான் எதிர்பார்த்த மாதிரி கிடைக்கவில்லை. இதனால் அப்பா நடிகர் மகனுக்காக நம்பர் நடிகை போல் வாடகை தாய் முறையை தேர்ந்தெடுத்து விட்டாராம்.

அப்பாவின் இந்த முடிவு மகனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருக்கிறாராம். ஆனாலும் இப்பொழுது தானே திருமணம் ஆகி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.

சிறு பிள்ளைகள் தானே என நெருக்கமானவர்களும் நடிகருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்களாம். ஆனாலும் நடிகர் பிடிவாதமாக இருப்பது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

Trending News