ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

என்னையும் என் தங்கச்சியையும் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட நடிகர்.. அப்பவே நடிகரின் முகத்திரையை கிழித்த சித்தி

Radhika: தற்போது சோசியல் மீடியாவில் நடிகைகள் ஒவ்வொருவரும் அவர்கள் அனுபவித்த டார்ச்சரை சொல்லும் விதமாக ஒவ்வொரு விஷயமும் பூகம்பமாக வெடித்து வருகிறது. மலையாளத் திரையுலகில் நடிகைகள் தரப்பிலிருந்து தொடர்ந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து வரும் நிலையில் இதைப் பற்றி விசாரிப்பதற்கு நீதிபதி ஹேமா தலைமையில் குழு அமைத்து வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்கனவே இது போன்ற விஷயங்களை அனுபவித்ததாக நடிகைகள் பலரும் மறைமுகமாக குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு விஷயமாக தற்போது பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம் வெளி வந்திருக்கிறது. அதில் ராதிகா, கேரவனில் நடந்த சம்பவத்தை ஒன்று விடாமல் சொல்லும் விதமாக அனைத்து விஷயங்களையும் வீடியோ மூலமாக பகிர்ந்து இருந்தார்.

தைரியமாக உண்மையை போட்டு உடைத்த ராதிகா

இதனைத் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் காலத்தில் அவர் பட்ட கஷ்டங்களையும் போட்டு உடைக்கும் விதமாக அந்த நடிகரின் முகத்திரையை கிழித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால் என்னையும் என் தங்கச்சியும் கட்டாயப்படுத்தி முத்த காட்சிகளில் நடிக்க வற்புறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.

முத்த காட்சிகள் என்றாலே அதற்கு பெயர் போனவர் கமல் தான். அப்படிப்பட்ட வரை தான் ராதிகா குறிப்பிட்டு இருக்கிறார். கமல் சினிமாவில் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெரிந்த என்சைக்ளோபீடியா என்று பெயர் வாங்கி இருக்கிறார். அதே மாதிரி இவருடைய படங்களில் ஹீரோயின் உடன் முத்த காட்சிகள் இல்லாமலும் எந்த ஒரு சீனும் இடம்பெறாது.

அந்த அளவிற்கு வாயாலேயே வாய் வைத்து சம்பவம் செய்யக்கூடிய லீலைகளின் மன்னன். அதனாலேயே இவருடன் நடிப்பதற்கு பல நடிகைகள் தயக்கம் காட்டி வந்திருக்கிறார்கள். இருந்தாலும் வாய்ப்புக்காகவும் படத்தை மிஸ் பண்ண முடியாது என்ற காரணத்தினாலும் பல நடிகைகள் சகித்துக் கொண்டு கமலுடன் நடித்திருக்கிறார்கள்.

இதில் அக்கா தங்கச்சின்னு முத்தத்தால் டார்ச்சரை அனுபவித்து இருக்கிறார்கள். அதாவது இது சம்பந்தமாக நடிகை ராதிகா கூறியது என்னவென்றால் கமல் என்னுடன் பலமுறை முத்த காட்சிக்கு முயற்சி செய்திருக்கிறார். அதனால் தான் அவருடன் சிப்பிக்குள் முத்து படத்துக்கு பிறகு பெரும்பாலும் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டேன்.

அதேபோலத் தான் என் தங்கை நிரோஷா கூட முத்தக்காட்சியில் வாயாலே வாய் வைத்து கலவரம் செய்திருக்கிறார். முத்தமிட விடாமல் செய்ததற்கு என்னை சனியனே என்று திட்டினார். அத்துடன் எனக்கு வந்த பல வாய்ப்புகளையும் தடுத்து நிறுத்திருக்கிறார். இதே போல அவருடைய மனைவி சரிக்காவையும் மிக கேவலமாக நடத்தி இருக்கிறார் என்று ராதிகா பேட்டியில் சில உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார்.

Trending News