Gossip: இப்போதெல்லாம் ஹீரோ சொல்வதை தான் இயக்குனர் கேட்க வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது. ஆனால் 90 காலகட்டத்திற்கு முந்தைய வருடங்களில் இயக்குனர் என்றாலே ஒரு பய பக்தியும் மரியாதையும் இருக்கும்.
இப்போது அந்த காலம் மலை ஏறிய நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் அடிதடி சண்டையே நடந்திருக்கிறது. ஏற்கனவே மக்கள் மத்தியில் சர்ச்சைகளுக்கு பெயர் போன அந்த பிரபலம் ஒரு படத்தில் நடித்து வந்தார்.
சும்மாவே பந்தா காட்டும் அவர் ஹீரோவான பிறகு தலையில் கொம்பு வைக்காத குறையாக இருந்திருக்கிறார். இயக்குனரின் வேலைகளில் தலையிடுவதில் தொடங்கி ஹீரோயினிடம் சில்மிஷம் பண்ணுவது வரை அவருடைய சேட்டை ஓவராக இருந்திருக்கிறது.
அடிதடியில் முடிந்த வாக்குவாதம்
இதனால் ஹீரோயின் ஒரு பக்கம் இயக்குனர் ஒரு பக்கம் என கடுப்பில் இருந்திருக்கின்றனர். ஆனாலும் அந்த பொறுமை ஒரு நாள் காற்றில் பறந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இருவருக்கும் சண்டை பற்றி எரிந்து இருக்கிறது.
ஹீரோ வழக்கம் போல தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் எகிறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இயக்குனரின் தன்மானத்தை சீண்டும் அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கிறார். இதுதான் இப்போதைய பிரச்சனைக்கு காரணமாக உள்ளது.
ஏற்கனவே படப்பிடிப்புக்கு வராமல் அவர் கொடுத்த டார்ச்சரை தாண்டி தற்போது பிரச்சனை கைகலப்பு வரை சென்றிருக்கிறது. இதனால் தான் இயக்குனர் தற்போது அவரை படத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனரை சீண்டிப் பார்த்த ஹீரோ
- பழைய காதலை இன்னும் மறக்காத பேபி நடிகை
- கல்யாணத்துக்கு தயாராகும் ஸ்வீட் நடிகை
- விருது நிகழ்ச்சியில் இப்படியா.?