வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

குடிப்பதற்கு தினுசு தினுசாக காரணம் தேடிய ரஜினி.. காலையில் 8 மணிக்கே கம்பெனி கொடுத்த நடிகர்

Actor Rajini: தற்போது ரஜினி எந்த அளவிற்கு படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதேபோல் ஆன்மீகத்திலும் அவருடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர், தற்போது பார்ப்பவர்கள் அனைவருக்கும் கொடுக்கிற அறிவுரை தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள் என்பதுதான். அதற்கு காரணம் இவர் அந்த அளவிற்கு கையில் பாட்டிலுடன் சுற்றி இருக்கிறார்.

அதாவது ரஜினி ஒரு காலத்தில் நிறைய குடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பொழுது இவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் கம்பெனி கொடுக்கும் விதமாக இருந்து மது அருந்தி இருக்கிறார்கள். இதில் ஆரம்பத்தில் இவருடன் நெருங்கிய நண்பராக ராதாரவி இருந்திருக்கிறார். அப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள்.

Also read: இணையத்தில் கசிந்த தலைவர் 170 டைட்டில்.. ஜெயிலரை தொடர்ந்து அடுத்த சம்பவத்திற்கு தயாரான ரஜினி

அதனாலயே இவர்களுடைய நட்பு ரொம்பவே வலுவாகிவிட்டது. அந்த நேரத்தில் ராதாரவி ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக ஹைதராபாத்துக்கு போகும் நேரத்தில் ரஜினி இவரை போன் பண்ணி வீட்டிற்கு உடனே வந்துட்டு போங்க என்று கூறியிருக்கிறார். ஆனால் இவருக்கு 10 மணிக்கு ஃபிளைட்,ரஜினி கூப்பிட்டது 8 மணிக்கு.

உடனே ராதாரவியும் எதைப்பற்றியும் யோசிக்காமல் ரஜினி கூப்பிட்டதற்காக உடனே வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்பொழுது போன உடனே காலையிலேயே பாட்டில் ஓபன் செய்து இரண்டு பேரும் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்பின் கொஞ்ச நேரம் கழித்து ரஜினி, ராதாரவி இடம் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார்.

Also read: விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் பிரபலம்.. ஜெயிலர் வெற்றிக்கு சொன்ன மொக்கையான காரணம்

அதாவது அந்த நேரத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்த அருணாச்சலம் படத்தில் முதலில் ராதாரவி தான் வில்லனாக தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் அப்பொழுது அந்த படத்திற்கு மூன்று வில்லன்கள் தேவைப்பட்டதால் ராதாரவி நடித்தால் சரியாக இருக்காது என்று இவரை தூக்கி விட்டார்கள். இந்த விஷயத்தை ராதாரவி இடம் சொல்வதற்காகவே இப்படி ஒரு ஏற்பாட்டை ரஜினி செய்து இருக்கிறார்.

இருவரும் குடிக்க ஆரம்பித்த பின்பு நட்பு ரீதியாக இந்த விஷயத்தை சொல்லி ராதாரவி மனசை தேற்றி அனுப்பி வைத்திருக்கிறார். இதை சமீபத்தில் ராதாரவி அளித்த ஒரு பேட்டியில் அவரே வாக்குமூலம் போல் அனைத்து விஷயங்களையும் கூறி இருக்கிறார். ஆனால் ரஜினி இப்பொழுது எல்லாத்தையும் விட்டு விட்டு ஆன்மீகப் பக்கம் சென்று ஒரு ஞானி போல் வாழ்ந்து வருகிறார்.

Also read: 500 கோடி வசூல் செய்தும் ஜெயிலரில் ரஜினிக்கு பிடித்தவர் இவர்தான்.. மாஸ் காட்டும் இல்லத்தரசிகளின் எதிரி

Trending News