சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஜெயலலிதாவை சுத்தி சுத்தி வந்த நடிகர்.. துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்ஜிஆர் பின் கலைஞரிடம் தஞ்சம்

சினிமா, அரசியல் என்று இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவை சுற்றி எப்போதுமே சர்ச்சைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். சிங்கப்பெண்மணியாக வாழ்ந்த அவர் இப்போது வரை புரியாத புதிர் தான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய வாழ்க்கை மட்டுமல்ல அவருடைய இறப்பும் கூட இன்று வரை மர்மமாக தான் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இவருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் இருக்கும் நட்பு பலராலும் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருந்தார் என்று கூறப்படுவதுண்டு. அதற்கு உதாரணமாக இப்போது ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.

Also read: 80-களில் எம்ஜிஆரை விட 4 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்.. தூக்கத்தை தொலைத்த புரட்சித்தலைவர்

ஒருமுறை ஜெயலலிதா வீட்டில் இருந்த பொழுது அவரை பார்ப்பதற்காக நடிகர் ஜெய்சங்கர் சென்று இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து யார் நீ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நன்றாக இங்கிலீஷ் பேசக்கூடிய ஜெய்சங்கரின் பேச்சை ஜெயலலிதா ஆர்வத்துடன் அமர்ந்து கேட்பாராம். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் புக்கும், கையுமாக இருக்கும் ஜெயலலிதா ஜெய்சங்கருடன் மட்டும் பேசுவது அந்த காலத்தில் பல்வேறு விதமாக திரித்து பேசப்பட்டது.

அதனாலேயே ஜெய்சங்கர், ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்திருக்கும் தகவல் எப்படியோ எம்ஜிஆர் காதிற்கு சென்று இருக்கிறது. உடனே அவர் கைதுப்பாக்கியுடன் ஜெயலலிதா வீட்டுக்கு சென்று இருக்கிறார். அவரை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்காத ஜெய்சங்கர் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து போயிருக்கிறார். அங்கு வந்த எம்ஜிஆர் தன்னுடைய துப்பாக்கியை காட்டி ஜெய்சங்கரை மிரட்டி இருக்கிறார்.

Also read: ஜெய்சங்கர் போலவே எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரே ஹீரோ.. மக்களை கவர்ந்த நாயகன்!

இதனால் பயந்து போன ஜெய்சங்கர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். இது அந்த காலகட்டத்தில் திரையுலகில் உள்ள அனைவருக்குமே தெரியுமாம். அதன் பிறகு எம்ஜிஆர் ஜெய்சங்கரை எந்த விதத்திலும் மிரட்டவில்லை. ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெய்சங்கர் கலைஞர் கருணாநிதியின் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து இருக்கிறார்.

இருப்பினும் எம்ஜிஆர் இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லையாம். அதாவது அன்றைய காலகட்டத்தில் எம்ஜிஆர் உடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த பலரும் இதுபோன்று கலைஞரை தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் ஜெய்சங்கரும் கலைஞரை தேடி சென்றிருக்கிறார்.

Also read: ஜெய்சங்கரின் குணத்திற்கு அடிமையான 5 நடிகர்கள்.. ஜென்டில்மேனாக வாழ்ந்து சாதித்த கௌபாய் கிங்

Trending News