Ajith – Amir Khan : மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் அவதிப்பட்ட நிலையில் பல பிரபலங்கள் உதவி செய்தனர். அதில் குறிப்பாக அஜித் நேரடியாக சென்று விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானுக்கு உதவிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. பொதுவாக அஜித் பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இருந்து ஒதுங்கி இருக்கக்கூடியவர்.
ஆனாலும் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர் எப்படிப்பட்டவர் என்று. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது போல வெளியில் தெரியாமல் பல உதவிகளை அஜித் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஷ்ணு விஷால் தானாகவே உதவி கேட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும் தனது தாயாரின் சிகிச்சைக்காக அமீர்கானும் அங்கு இருந்தார். அவர்களை அஜித் மீட்டு வந்த பின் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை விமர்சிக்கும் விதமாக போஸ் வெங்கட் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
Also Read : விஜய்யின் தலைக்கணக்கத்துக்கு அஜித் வைக்கப்போகும் ஆப்பு.. ஃபார்முலாவை மாற்றிய ஏகே..!
அதாவது வந்த வரை வாழவைக்கும் தமிழ்நாடு வடநாட்டவரையும் காக்கும். ஆனால் உங்களை விரும்பி டிக்கெட் எடுத்து பார்க்க வரும் ஏழைகளுக்கு ஒரு போட் அனுப்பவில்லையே என அஜித்தை வம்புக்கு இழுக்கும்படி போஸ் வெங்கட் ஒரு ட்வீட் போட்டு இருந்தார். அதாவது அஜித் இப்போதும் சென்னையில் உள்ள மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.
ஆனால் அது வெளியில் தெரியாமல் ரகசியமாக செய்து வருகிறார். இந்த சூழலில் போஸ் வெங்கட் இவ்வாறு போட்ட பதிவினால் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அஜித் தொடர்ந்து உதவி வருவதையும் பாராட்டி போஸ் பதிவுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்