தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் கவனம் பெற்ற ஒரு சில நடிகர்கள் அதன்பிறகு என்ன ஆனார்கள் என்பது மர்மமாக உள்ளது. அவ்வாறு டி ராஜேந்தர் ஆல் அறிமுகமான ஒரு நடிகர் தற்போது எங்கு உள்ளார் என்ற எந்த தகவலும் தெரியவில்லை.
டி ராஜேந்தர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் உயிருள்ளவரை உஷா. இப்படத்தின் மூலம் கங்கா மற்றும் நளினி இருவரையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் டி ராஜேந்தர். இப்படத்தின் கதை, வசனம், பாடல், இசை என ரசிகர்களால் அனைத்தும் கவரப்பட்டது.
மேலும் உயிருள்ளவரை உஷா படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வெள்ளிவிழா கண்டது. இப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் கங்கா. இவர் அதன்பிறகு மாதவன் தயாரிப்பில் வெளியான கரை தொடும் அலைகள் படத்தில் நடித்திருந்தார்.
முருகனே துணை என்ற படத்தில் ராஜேஷ், மாதிரி, சுதா சந்திரனுடன் கங்கா நடித்திருந்தார். அதன்பிறகு விசு இயக்கத்தில் வெளியான மீண்டும் சாவித்திரி, லட்சுமி வந்தாச்சு போன்ற படங்களில் கங்கா நடித்து இருந்தார். இதை தொடர்ந்து அம்மா பிள்ளை போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
அப்போதைய காலகட்டத்தில் காதல் படங்கள் என்றாலே பெரும்பாலும் கங்கா நடித்திருப்பார். இவர் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பிறகு சின்னத்திரை தொடர்கள் மற்றும் நெடுந்தொடர்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்ற பல முயற்சிகள் எடுத்தும் அதில் எந்த பயனும் இல்லை. டி ஆரின் அற்புதமான கண்டுபிடிப்பான கங்கா சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தம் அளிக்கிறது.