Rajini : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 171 படம் தொடங்க இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமார், சாண்டி மாஸ்டர், சிவகார்த்திகேயன், திரிஷா, சோபனா போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
இப்போது தலைவர் 171 படத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது 80களில் ஹீரோவாக கலக்கிய நடிகர் இப்போது ரஜினிக்கு டஃப் கொடுக்க போகிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஒரு படத்திலும் நடித்து இருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டாருடன் மோத போகும் மைக் மோகன்
அதாவது வெள்ளிவிழா நாயகன் மோகன் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார். விஜய்யின் கோட் படத்திலும் மோகன் நடித்துள்ள நிலையில் இப்போது ரஜினியின் படத்திலும் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
80களில் ரஜினி மற்றும் கமல் படங்களை தாண்டி மோகனின் படங்கள் தான் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வந்தது. சில காரணங்களினால் அவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நிலையில் டாப் நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியுடன் ஏற்கனவே ராகவேந்திரா என்ற படத்தில் மோகன் நடித்திருந்தார்.
மேலும் தலைவர் 171 படத்தில் ஷாருக்கானுக்கும் முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதோடு விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் தலைவர் 171 படம் பக்க ஆக்சன் படமாக வெளியாக உள்ளது.