திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

Narendra Modi: பெரியாரும் நானே, ராமரும் நானே.. மோடியின் பயோபிக்கல் நடிக்கும் நக்கல் நையாண்டி பிடிச்ச நடிகர்

சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் பிரபலங்கள் என பலரின் பயோபிக்கை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட இளையராஜாவின் பயோபிக் எடுப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடித்த வருகிறார். இந்நிலையில் பாஜக தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடியின் பயோபிக் எடுக்கப்பட உள்ளது. சாதாரண மனிதனாக தனது வாழ்க்கையை தொடங்கி நாட்டின் பிரதமராக மோடியின் வளர்ச்சி இருந்துள்ளது.

இவரின் பயோபிக்கை இப்போது எடுக்க உள்ள நிலையில் அதற்கு சரியான நடிகரை தேர்வு செய்து இருக்கின்றனர். அதுவும் தமிழ் நடிகர் என்பதில் பெருமை ஏற்பட்டிருக்கிறது. அதாவது நக்கல் நையாண்டி பிடித்தவர் என்றாலே அனைவருக்கும் சத்யராஜ் என்பது தெரிந்த விடும்.

மோடியாக நடிக்கப் போகும் சத்யராஜ்

பான் இந்திய மொழி படங்களில் சத்யராஜ் அதிகம் நடித்து வருகிறார். ஏனென்றால் எல்லாம் மொழிகளிலும் இவரது படங்கள் வெளியாவதால் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சியமானவராக சத்யராஜ் இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி ஆன்மீகத்தில் திளைத்தவர்.

ஆனால் சத்யராஜ் அதற்கு நேர் எதிராக உள்ளவர். பெரியார் கொள்கையை பின்பற்றும் இவர் பெரியார் படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது மோடியாக நடிக்க வேண்டும் என்றால் ராமனை போற்ற வேண்டும்.

மேலும் தனது கொள்கை என்பது வேறு, சினிமா என்பது வேறு என்பதை நன்கு உணர்ந்த சத்யராஜ் மோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

Trending News