வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தளபதி 68-இல் பிரசாந்த் நடிப்பதற்கு தடையாக இருக்கும் நடிகர்.. வாழ்க்கைப் போச்சு, திரும்ப கேரியரும் போயிடும் போல

Thalapathy-68 Prasanth: விஜய், லியோ படத்தை முடித்த கையோடு இவருடைய அடுத்த படமான 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் லாக் செய்து இருக்கிறார். இப்படத்திற்கான பணிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.

ஒருவேளை இந்தப் படத்தில் பிரசாந்த் நடித்து விட்டால் கண்டிப்பாக இப்படம் அவருடைய கேரியருக்கு மிக திருப்புமுனையாக அமையும். அத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடும். ஆனால் இவர் இதில் நடிப்பதற்கு ஒரு நடிகர் மிகப்பெரிய தடையாக இருக்கிறார். இதற்கிடையில் பிரசாந்த் டாப் ஸ்டார் ஆக ஒரு காலத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

Also read: விஜய்யை வீழ்த்த சன் பிக்சர்ஸ் எடுத்த அஸ்திரம்.. பெருந்தலைகள் பிரச்சனையில் சிக்கிய கிரிமினல் மைண்ட்

அப்படி இவர் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இவருடைய அப்பா தான். தற்போது பிரசாந்தின் கேரியரும், கல்யாண வாழ்க்கையும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கும் இவருடைய அப்பா தான் காரணம். அதேபோல தான் தளபதி 68 படத்தில் பிரசாந்தை நடிக்க விடாமல் தடை கற்களாக இருப்பதும் இவருடைய அப்பா தியாகராஜன் தான்.

அதாவது பிரசாந்த் முன்னணி ஹீரோவாக இருக்கும் பொழுது இவர் எந்த படத்தில் நடிக்க வேண்டும். அதற்கேற்ற கதையே தேர்வு செய்யக்கூடிய இடத்தில் இவர் அப்பா இருந்தார். முக்கியமாக பிரசாந்த் நடிக்கும் படங்களில் இவரை விட யாரும் டாமினேட்டாக நடித்து விடக்கூடாது என்ற விஷயத்தில் சைலண்டாக இருந்து பல வேலைகளை பார்த்திருக்கிறார்.

Also read: பிரசாந்த் உதவி செய்யாமல் தவிக்க விட்ட நடிகர்.. ஆலமரம் போல் இன்று வளர்ந்து நிற்கும் நெருங்கிய சொந்தம்

அதனாலேயே தேடிவந்த நல்ல வாய்ப்புகள் அனைத்தும் இவரை விட்டு கைநழுவி போனது என்றே சொல்லலாம். அதனால் தளபதி 68 படத்தில் பிரசாந்த் நடிக்கணும் என்றால் எந்த மாதிரியான கேரக்டர் என்று முழு விவரத்தையும் தெரிந்து கொண்ட பின்னே நான் முடிவு சொல்கிறேன் என்று இருக்கிறார். அதற்கு காரணம் விஜய் படத்தில் பிரசாந்த் நடித்தால் அவருக்கு டம்மியான கேரக்டர் வந்துவிடக் கூடாது என்ற பயத்தினால் எந்த பதிலும் சொல்லாமல் யோசித்துக் கொண்டு வருகிறார்.

ஆனால் தற்போது பிரசாந்த் நடிக்காமல் இருப்பதற்கு அட்லீஸ்ட் விஜய் படத்தில் நடித்தால் ஆவது ஒரு நல்ல பெயர் கிடைக்கும். அதன் மூலமாக அடுத்தடுத்த வாய்ப்புகளும் வருவதற்கு சான்ஸ் இருக்கிறது. இதையெல்லாம் யோசிக்காமல் பழையபடி தியாகராஜன், நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று இருக்கிறார். இதற்கு பிரசாந்தே ஒரு முடிவு எடுத்தால் தான் தீர்வாகும்.

Also read: பிரசாந்த் உதவி செய்யாமல் தவிக்க விட்ட நடிகர்.. ஆலமரம் போல் இன்று வளர்ந்து நிற்கும் நெருங்கிய சொந்தம்

Trending News