3 வருடம் நயன்தாராவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகர்.. இப்ப ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தாச்சு

நயன்தாராவுக்கு இந்த வருடம் சினிமாவில் சில சறுக்கல்கள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவர் நினைத்த மாதிரி தான் எல்லாம் நடந்திருக்கிறது. பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டது முதல் இரட்டை குழந்தைகளுக்கு தாயானது வரை அவர் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை இவரைப் பற்றி ஏகப்பட்ட சர்ச்சையான செய்திகள் வெளிவந்தது. இப்போதும் இவர் சர்ச்சைகளின் ராணியாக தான் இருக்கிறார். ஆனால் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் சிம்பு, பிரபு தேவா உள்ளிட்டோரை இவர் காதலித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் வேறு சில நடிகர்களுடன் கூட இவர் கிசுகிசுக்கப்பட்டார்.

Also read: இப்ப தெரியுதா நான் ஏன் லேடி சூப்பர் ஸ்டார்ன்னு.? கெத்தாக பேசி வாய்விட்டு மாட்டிய நயன்தாரா

அந்த வகையில் இவர் நடிகர் ஆர்யாவுடன் மூன்று வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாராம். பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். அந்த மூன்று வருட காலமும் நயன்தாரா ஆர்யாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாராம்.

அதிலும் ஆர்யா கதை கேட்டு ஓகே சொன்னால்தான் அவர் அந்த படத்தில் நடிக்கவே சம்மதிப்பாராம். ஒருமுறை கமல்ஹாசன் உடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் அவருடன் நடித்தால் முத்த காட்சிகள் எல்லாம் இருக்கும் என்பதற்காகவே ஆர்யா அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறினாராம். அதை கேட்ட நயன்தாராவும் அந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

Also read: 2022-ல் சர்ச்சையில் சிக்கிய 6 நடிகைகள்.. மீடியாவையே கிடுகிடுக்க வைத்த இரவின் நிழல் நாயகிகள்

இப்படியாக அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தது பற்றி அப்போதே பல செய்திகள் வெளிவந்தது. ஆனால் இருவரும் இது குறித்து வாயே திறக்காமல் இருந்தனர். அதன் பிறகு சில வருடங்களிலேயே இருவரும் பேசி சுமூகமாக பிரிந்து இருக்கின்றனர். அப்போதுதான் நயன்தாரா விக்னேஷ் சிவனை சந்தித்திருக்கிறார். இவர் தான் தனக்கு சரியான பாதுகாவலர் என்று நினைத்து அவரை காதலித்த நயன்தாரா தற்போது திருமணமும் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாகவும் மாறி இருக்கிறார்.

அதேபோன்று ஆர்யாவும் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் அவருடன் இணைந்து நடித்த சாயிஷாவை நிஜமாக காதலித்திருக்கிறார். இருவருக்கும் இடையே பல வருட வயது வித்தியாசம் இருந்தாலும் தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அந்த தம்பதிகளுக்கு இப்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

Also read: நயன்தாரா பாணியில் நடித்து அவரேயே ஓரம்கட்டி விருது வாங்கிய நடிகை.. புலம்பி வரும் லேடி சூப்பர்ஸ்டார்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்